தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.துர்கா, சிதம்பரம்: அந்துமணிக்கு எப்படிப்பட்டவர்களைப் பிடிக்காது?

பொய்யையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களைக் கண்டாலே ஆகாது; காத துாரம் ஓடிப் போவேன்!

ஆர்.ஹரிகிருஷ்ணா, திருப்பூர்: 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியில் வெளியாகும் கேள்விகளைப் படிக்கும் போது, உங்களுக்கு என்ன தோன்றும்?

மனித மனங்களில் இவ்வளவு வக்கிரங்களா... பெண் இனத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு கொடுமைகள்; தண்டனைகள்... சில பிரச்னைகள் மனதை கனக்கச் செய்து, நெஞ்சை பாரமாக்கி விடுகிறது.

* ஆர்.தனபால், திருவள்ளூர்: பிழைக்க வழி தெரியாமல் இருக்கிறேன்; இது யாருடைய பிழை?

சந்தேகம் இல்லாமல் உங்களுடையது தான்; துணிந்தவனுக்கு துக்கம் இல்லை. பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் கொட்டிக் கிடக்கிறது கோடி வழி; நீங்கள் கண்ணை மூடிக் கொண்டுள்ளீர்கள். சாரி பிரதர்!

* எம்.ராஜ்குமார், சென்னை: இன்றைய நிலையில் சிக்கனம் அவசியமா?

வீட்டிற்கு மட்டுமல்ல, நாட்டுக்கே சிக்கனம் அவசியம். ஆடம்பரமான திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள், கொடி அசைப்புகள், அலங்கார மாநாட்டு பந்தல்கள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். அள்ளி விடும் காசு, மக்கள் கட்டும் வரிப்பணம் என்பது, ஆளுவோருக்கு புரிய வேண்டும்!

வி.குப்புசாமி, மதுரை: ஆண்களின் வாழ்க்கையில், தென்றல் வீசுவது திருமணத்துக்கு முன்பா, பின்பா?

திருமணமான பல நண்பர்களிடம் இது குறித்து விசாரித்து விட்டேன்... திருமணத்துக்கு பின், தம் நிலை, புயலுக்கு ஒப்பாகி விட்டது என்கின்றனர்!

* எம்.மூர்த்தி, கோவை: அரசு அலுவலகங்கள் என்றாலே வேலை நடக்காது என்பது பொதுவான கருத்து; ஆனால், பத்திரப் பதிவு துறை, பொதுப்பணித்துறை, தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் இரவு, பகல், விடுமுறை நாட்களில் கூட வேலை நடக்கிறதே...

உண்மை தான்; லீவு நாட்களில் வேலை செய்தாலும், 'டப்பு' கிடைக்கும் துறைகள் அல்லவா இவை. லீவு போட்டால், அன்றைய, 'மேற்படி வருமானம்' கிடைக்காமல் போய் விடுமே!

வி.ஜோதி, கடலுார்: தமிழைத் தவிர, மற்ற மொழி தெரியாத நம் எம்.பி.,கள், பாராளுமன்றத்தில் என்ன செய்வர்?

வழக்கம் போல, 'கொர்... கொர்' தான். கனவிலேயே, மதிய சாப்பாட்டுக்கு, ஆந்திர பவன் போவோமா, யு.என்.ஐ., கேன்டீன் போவோமா என, முடிவு செய்து விடுவர்!

ஜெ.பாபு, விருதுநகர்: காதலில் நம்பிக்கை இல்லாத எனக்கு, சமீபகாலமாக, மூன்று பெண்கள் காதல் துாது விடுகின்றனர்; என்ன செய்ய...

ஒண்ணே ஒண்ணு... கிடைக்காதா என, அவனவன் அலைஞ்சுட்டுக் கிடக்கான். ஹூம்... உங்க காட்டுல மழைதான் போங்க... உங்க டேஸ்டுக்கு ஏற்ப, மூணுல ஒண்ணை, 'செலக்ட்' பண்ணி ஜமாயுங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us