தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பா.மாசிலாமணி, தேனி: 'நேரமில்லை... நேரமில்லை' என்று அடிக்கடி சொல்வர், நிஜமாகவே பிசியாக இருக்கின்றனரா அல்லது வேலையை தாமதப்படுத்த அவர்கள் சொல்லும் சாக்கு போக்கா?

உலகில் பிறந்த அனைவருக்குமே எந்தவித ஏற்ற, தாழ்வும் இல்லாமல், 24 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் மூலமாக வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும். அந்த திட்டமிடல் இல்லாமைதான் இந்த புலம்பலுக்கு காரணம்!

கே.ஆர்.தாமு, ராமநாதபுரம்: அனைவரும் நம்மை மதித்து நடக்க என்ன வழி?

நீங்களும் அவர்களை மதித்து நடக்க வேண்டியது தான்.

பி.விஜயகுமாரி, கோவை: இந்த நாட்டில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் யார்?

என்னம்மா இப்படி கேட்டுப்புட்டீங்க... நம்மள நாமே மறக்கலாமா?

என்.ஜெ.சந்துரு, திண்டிவனம்: நடிகைகள் என் கனவில் வந்து வாட்டுகின்றனரே...

கனவில் வாட்டும் நடிகைகளின், 'மேக்கப்' இல்லாத புகைப்படங்களை அடிக்கடி பாரும்!

எஸ்.செல்வ ராணி, சென்னை:இன்றைய உலகில் நிம்மதியாக வாழ்பவர்கள் யார்?

கடன் சுமை இல்லாதிருப்பவர்களே!

கு.ரத்தினம், திருப்பூர்:'ஆம்லெட்' போடுவதும் ஒரு கருவை கலைப்பது போலத் தானே?

இல்லை! சேவலுடன் இணைந்த பின் இடப்படும் முட்டைக்கு மட்டுமே குஞ்சு பொரிக்கும் தன்மை உண்டு. அவ்வாறு இல்லாமல் பெறப்படும் முட்டைகள், 'ஆம்லெட்' போடத்தான் லாயக்கு!

* ஜி.ராமமூர்த்தி, புதுச்சேரி: வேலையில்லா பட்டதாரிகளுக்கு உங்கள், 'அட்வைஸ்' என்ன?

டேபிள் - சேரில் அமர்ந்து பார்க்கும், 'ஒயிட் - காலர் ஜாப்'க்கு காத்திருந்து, வாழ்வின் முக்கிய கட்டத்தை, வீணாக்கி, கெட்ட பெயர் எடுக்காதீர்கள்... முதல் போடாத எத்தனையோ தொழில் ஊரில் இருக்கு... அதில், ஆயிரக்கணக்கில் வருமானமும் இருக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஐ.பாரதி, காஞ்சி: அழகு, அறிவு, அடக்கம் -இம்மூன்றில், பெண்ணுக்கு மிக முக்கியமானது எது?

அறிவு! இக்கால பெண்களுக்கு அறிவு மிகத் தேவை. அறிவை வளர்த்துக் கொள்ளும் பெண்ணிடம் அடக்கம் போன்ற பண்புகள் தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும்.

* பி.காயத்ரி, சென்னை: வாழ்வில் வெற்றி பெற படிப்பறிவு தேவையா, அனுபவம் போதுமா?

முதலாவது ஓரளவுக்கு உதவும். இரண்டாவது ரொம்ப, ரொம்ப முக்கியம். ஏற்கனவே வெற்றி பெற்றவர்களிடமிருந்து அனுபவ அறிவை பெற்றுக் கொள்வது லாபகரமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us