தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : அக் 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.துர்கா, சென்னை: தமிழ் நாளிதழ்களைப் படிக்கும் பழக்கம் பெண்களிடம் அதிகம் பரவவில்லையே... காரணம் என்ன?

அரசியல்! நம்மூர் பெண்களுக்கு அரசியல் தெரியாது; புரியாது! நாளிதழ்களில் அதிகம் ஆக்கிரமித்துக் கொள்வது அரசியல் செய்திகள் தான். ஆகவே, நாளிதழ்கள் பக்கம் பெண்கள் வருவதில்லை. ஆனால், 'செக்ஸ்' தொடர்பான நாளிதழ் செய்திகளை மட்டும் அவர்கள் விரும்பிப் படிப்பதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது!

வி.ரேவதி, சிதம்பரம்: ஒரு நல்லவனைத் திருமணம் செய்து கொள்வதை விட, ஒரு கெட்டவனைத் திருமணம் செய்து, அவனைத் திருத்தி, நல்வழிப்படுத்துவதே மேல் என்பது என் அபிப்ராயம்...

உன்னதமானது தான்... ஆனால், நல்லவனைத் திருமணம் செய்து கொண்ட பெண்கள் கூட நிம்மதியாக இருப்பதாக தெரியவில்லை எனக்கு!

* பி.பாலாஜி, காஞ்சிபுரம்: அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே கொள்கையாக எதைக் கருதுகிறீர்கள்?

உங்களுக்கு தெரியாதா என்ன... 'சந்தர்ப்பவாதம்' - இது தான் இன்று அனைத்துக் கட்சிகளின் கொள்கை!

ஐ.ரவிச்சந்திரன், திண்டுக்கல்: முதலாளித்துவம் ஒழிந்தால் தான் நாடு முன்னேறுமா?

சோவியத் யூனியனை ஒழித்தனர். இத்தனை ஆண்டுகளில் சோம்பேறிகளை உருவாக்கினர். 'ஒர்க் கல்ச்சர்' என்ன என்பதையே மறக்க வைத்தனர். சோவியத் யூனியன், துண்டு துண்டானது தான் கண்ட பலன்!

எல்.தேவிபாலா, கோவை: ஆண்களுக்கு, உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால், பெண்களாகிய நாங்கள் துடித்துப் போகிறோம். ஆனால், அதுவே, எங்களுக்கு வந்தால், சலித்துக் கொள்கின்றனரே...

வடிகட்டிய சுயநலம், 'இது போனால் இன்னொன்று...' என்கிற அசட்டுத் துணிச்சல், என்னவானாலும் மகளிரே சமாளிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு... பிரியத்துடன், மருந்து, மாத்திரை எடுத்துக் கொடுத்தால் போதுமே... உருகி விட மாட்டார்களா!

* ஆர்.ஹரிகரன், விருதுநகர்: தன்னம்பிக்கை அதிகம் காணப்படுவது ஆண்களிடமா அல்லது பெண்களிடமா?

சந்தேகமே இல்லாமல் பெண்களிடம் தான்! கணவனை இழந்த பின், எத்தனை பெண்கள் சுயகாலில் நின்று குடும்பத்தை கரை சேர்க்கின்றனர்... மொடாக் குடியனாக, வீட்டு செலவுக்கு காசு தராத கணவர்களை ஓரம் கட்டி, தன்னம்பிக்கையுடன் செயல்படும் தாய்மார்கள் ஏராளம்... பொறுப்பில்லாமல் பெத்துப் போட்டு, சீட்டு, ரேஸ் என்று அலையும் தகப்பனை, 'இக்னோர்' செய்து, உடன் பிறந்தோரை நல்ல நிலைக்கு கொண்டு வர, தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனரே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us