sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 13, 2019

Google News

PUBLISHED ON : ஜன 13, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆர்.கோவிந்தன், தேனி: எதற்கெடுத்தாலும், பிரச்னைகளுக்காக, பலரும், கிளர்ச்சி செய்கின்றனரே... இதை, 'டிவி'யிலும் ஒளிபரப்பி வருகின்றனரே...

இது, தவறான செயல்! நமக்கு, உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவர் கவனிப்பார்... அவர், அதை சரி செய்ய முயல்வார்... சரியாகவில்லை என்றால், அவரைப் போட்டு அடிக்கலாமா? 'டிவி'யில், இவற்றை பார்க்காதீர்கள்!

என்.பஞ்சவர்ணன், நாகர்கோவில்: சினிமாவில் நடிக்க விரும்புகிறேன்; சென்னை வந்து முயற்சி செய்யலாமா?

சென்னையில், நிறைய ஓட்டல்கள் உள்ளன... அங்கு, 'சப்ளையர்' வேலை, நிச்சயமாகக் கிடைக்கும்!

எஸ்.சரவணன், பாண்டி: எனக்குப் பிடித்த, கொஞ்சம் பழைய நடிகையரை, விட்டு விட்டு, திரைப்படங்களில், இளமையானவர்களை நடிக்க வைக்கின்றனரே... ஏன்?

இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை... லென்ஸ் மாமாவிடம் கேட்டேன்... 'பிஞ்சு வெண்டக்காய் தான் சுவையாக இருக்கும் என்பது கூட உனக்குத் தெரியாதா...' என, முகத்தில் அடித்தார் போல், பதில் கூறினார்!

பெ.ராஜதுரை, சென்னை: விஷம் கலந்த கழிவுநீரை, நதி நீரில் கலந்து விடும் சாயப்பட்டறை அதிபர்களை என்ன செய்வது?

'கம்பி' எண்ண வைக்க வேண்டும். ஆனால், சில அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும், அவர்களிடம், கை நீட்டி, கை கட்டி நின்று விடுகின்றனரே... அரசும், இதற்கு உடந்தையாய் இருப்பது தான், மிகவும் சங்கடமாக உள்ளது!

எம்.கல்பலதா, சென்னை: மணி, உங்களது, கை பேசியில் விடியற்காலையிலேயே, குறுந்தகவல் செய்பவர்கள் உண்டா?

உண்டே! பணியில் இருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர்; பெரிய எழுத்தாளர்; இதுவரை, 100 புத்தகங்கள் எழுதி விட்டார். 100வது புத்தகத்தின் விலை, 1,500 ரூபாய். விடிகாலை, 4:00 மணிக்கெல்லாம் குறுந்தகவல் அனுப்பி விடுவார்.

அது, ஆங்கிலத்தில் இருக்கும்... அத்தனையும் தத்துவங்கள். கடைசியில், ஆங்கிலத்திலேயே, காலை வணக்கம் சொல்வார்; அது மட்டுமே எனக்கு புரியும்!

உடனே நானும், 'குட்மார்னிங் சார்...' என்று மட்டும் பதில் அனுப்பி விடுவேன்!

சில நாட்களில், களைப்பு அல்லது வேறு வேலை காரணமாக அவர் குறுந்தகவல் அனுப்பவில்லை என்றால், அவருக்கு, நானே காலை வணக்கம் அனுப்பி விடுவேன்... காலை, 4:00 மணிக்கு!

* எம்.ஜெசி, சென்னை: யாருக்கு, நெஞ்சு வலி அதிகமாக வரும்?

அரசியல்வாதிகளுக்கு... பொய் பேசுபவர்கள், அவர்கள் தானே! பொய் பேசினால், 'இது' கண்டிப்பாக வந்தே விடும்!






      Dinamalar
      Follow us