
* எஸ்.குணசீலன், சேலம்: என் நண்பன் ஒருவன், 'பணத்தை வெறுக்கிறேன்...' என, அடிக்கடி கூறுகிறானே... ஏன்?
அவரது பையை தொட்டுப் பாருங்கள்... அது, காலியாக இருக்கும்! ஆனால், அவரின் நண்பர்கள், சொந்தங்கள், அக்கம் பக்கத்தவரின், 'பர்ஸ்' நிறைந்திருப்பதைக் கண்டிருப்பார்! அதனால், வந்த வெறுப்பு இது!
ஆர்.ரஜினி, காஞ்சிபுரம்: உ.பா., அருந்தினால், கட்டுப்படுத்த முடியாத பலம், ஆண்களுக்கு ஏற்படுகிறது... இதுவே பெண்களானால்...
உ.பா., அருந்திய பின், பெண்கள், சப்தமாக பேசுவோரே தவிர, அடிதடியில் ஈடுபட மாட்டார்கள்! லென்ஸ் மாமாவிற்கு துணையாக சென்றபோதெல்லாம், மதுக்கூடங்களில் அவர்களை கண்டதில்லை; ஆனால், அவர், சென்னையில் அழைத்துப் போகும், 'ஐந்து நட்சத்திர ஓட்டல்'களில் மட்டும் கண்டிருக்கிறேன்! கிராமங்களில், மரத்தடியிலேயே பார்த்திருக்கிறேன்...
* ஏ.மீனாட்சி சுந்தரம், நெல்லை:இன்று, கெட்டிக்கார அரசியல்வாதி என்று யாரை கூறலாம்?
மனதை ஒரு நாளும் திறக்காமல், வாயை மட்டும் திறப்பவன்! இவனே, வேட்டியில் பணத்தை சிறப்பாக பத்திரப்படுத்திக் கொள்கிறான்!
* எம்.ராமசுப்பிரமணியம், திப்பிராஜபுரம், கும்பகோணம்: மனைவியிடம் நல்ல பெயர் வாங்க, ஏதாவது, 'டிப்ஸ்' கொடுங்களேன்...
எனக்கு அனுபவம் இல்லாததால், 'லென்ஸ்' மாமாவிடம் கேட்டேன்... அவர் சொன்ன பதில், இது தான்... 'மனைவிக்கு சந்தேகம் வராமல், நடிக்க பழகிக் கொள்ள வேண்டும்!'
கே.வெங்கட்ராமன், தென்காசி: தன்னைத் தானே, 'தமிழர் தலைவர்' எனக் கூறிக் கொள்ளும், தி.க., தலைவர், வீரமணி, இந்து மதத்தில் உள்ள, ஒரு ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும், மட்டம் தட்டியும் வருகிறாரே... மற்ற ஜாதிக்காரர்களைப் பற்றி, வாய் திறப்பதில்லையே... இது ஏன்?
இவர் திட்டும் ஜாதியினர், கம்போ, தடியோ கையில் எடுக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான்!
அதே ஜாதிக்காரனான, வட மாநிலத்தை சேர்ந்த ஒருவன், கோபம் வந்தபோது, இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்... அதற்கு முன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் என்ற வெள்ளைக்கார, கலெக்டரை சுட்டுக் கொன்று, தானும் சுட்டு செத்தான், இதே ஜாதிக்காரன்...
இப்போது, தேர்தல்கள் நெருங்குகின்றன... இந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள், ஒன்று கூடி, பொதுக் கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது...
அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த, வெறி கொண்ட இளைஞன் ஒருவன், இவர்களை, 'கவனிக்க' வாய்ப்பு ஏற்பட்டு விட்டால்...
எனவே, இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!