தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூன் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வி.கே. சீனிவாசன், சென்னை: அரசியல்வாதிகளின் நுாற்றாண்டு விழாக்களின்போது, 'கம்பி' எண்ணுவோரை, விடுதலை செய்கின்றனரே... இது, ஏற்புடையதா?

அவன், குற்றம் செய்தவன் என்பதை கண்டறிந்த பின் தானே, நீதிமன்றங்கள், தண்டனை வழங்கியுள்ளது; அவன், அதை முழுவதையும் அனுபவித்தே தீரவேண்டும்!

இப்போது, சில தெரு ஓர கட்சிகள், 'அந்த ஏழு பேரையும்' விடுதலை செய்ய வேண்டும் என, கூச்சலிடுவதைக் கேட்கும்போது, நெற்றியில் அடித்துக் கொள்கிறேன். இவர்கள் வீட்டில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால்... நினைத்துப் பார்க்கட்டும், அவர்கள்!

ஜே.ஆர். ராஜாராம், பரமக்குடி: சென்னையில் உள்ள, படித்த பெண்களும், தம் கணவர்களை, 'நீ... வா... போ...' என பேசுகின்றனரே... கேட்க சகிக்கவில்லை...

உங்களது நெருங்கிய நண்பர்களை, 'நீங்க... வாங்க... போங்க...' என்றா சொல்வீர்கள்... அதே போன்றது தான் இதுவும் என்று, ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது!

பி. ஜெனிபர், தஞ்சாவூர்: பகையை உண்டாக்கும் செயல் எது?

திமிராகப் பேசுவது மற்றும் நடந்து கொள்வது. இதனால், லாபம் இல்லை; இச்செயல்களால் நஷ்டம் தான் வந்து சேரும்!

டி.எச். லோகாவதி, மதுரை: காதலியின் முதல் முத்தம், சிறு பெண் குழந்தைகளின் முத்தம்... எது, அதிக இன்பம் தரும்?

எனக்கு தெரிந்த வரை, இரண்டாவதில் தான்! நண்பர்களின், சிறிய வயது, பெண் குழந்தைகளிடம் இருந்து மட்டுமே! எனக்கு தான், முதல் அனுபவமே கிடையாதே!

* பி. பாலாஜி கணேஷ், சிதம்பரம்: தினமும், காலையில், ராசிபலன் பார்ப்பது நல்லதா?

'போன நேரத்தை திரும்ப பெற முடியாது' என, எத்தனை முறை எழுதி இருக்கிறேன்... இவற்றை எல்லாம் படித்து, பார்த்து, சோம்பேறி ஆகாதீர்!

கி. துரைசாமி, மங்கலம்பட்டி, ஈரோடு: பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு... உங்களுக்கு, இனிப்பது எது?

கோவில்பட்டி, காராசேவு தான்! இனிப்புகள் பக்கம் திரும்பவே மாட்டேன்!

ஆர். தமிழ்நிலவு, கம்பம்: கோர்ட் படிகள் ஏறாமல் இருப்பவர்கள், கொடுத்து வைத்தவர்கள்தானே?

'நோ நோ' அப்படிகளில் ஏறும் வழக்கறிஞரே கொடுத்து வைத்தவர்!

எனக்கு தெரிந்து, சைக்கிளிலும், பழைய, டி.வி.எஸ்., - 50லும், பல வழக்கறிஞர்கள், கோர்ட்டுக்கு வந்து சென்றனர்... இன்று, 'பென்ஸ்' காரின் பின் சீட்டில் அமர்ந்து, கால் மீது கால் போட்டவாறே அல்லவா செல்கின்றனர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us