தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

அன்று, அலுவலகத்தில் நுழையும்போதே, அரசு துறையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற, குணாஜி சோகமே வடிவாக அமர்ந்திருந்தார்.

'என்னாச்சு ஜி... எப்போதும் கலகலப்பாக இருப்பீங்களே... என்ன விஷயம்?' என்றேன்.

'பணி ஓய்வு பெற்றதிலிருந்து, எனக்கு பிடிக்காத வேலையை செய்ய சொல்றாப்பா, என் மனைவி...' என்றார், அழாத குறையாக.

'என்ன வேலை அது...' என்றேன்.

'எனக்கு நாய்கள்னாலே பிடிக்காதுன்னு உனக்கு தெரியும் தானே, மணி. யாரோ கொடுத்தாங்கன்னு, ஒரு நாயை ஆசையா வளர்க்குறா, என் மனைவி. அத அவதானே பாத்துக்கணும்! அதை விட்டுட்டு, அந்த நாயை, 'வாக்கிங்' கூட்டிட்டு போக சொல்றாப்பா...

'எப்பவோ, ஒரு காலத்துல, பெண் நண்பியுடன் பேசுவதற்காக, தெரு நாய் ஒன்றை இழுத்துச் சென்றது உண்மை தான். அந்த விஷயம் தெரிஞ்ச என் மனைவி, இப்ப பழி வாங்கறாப்பா... மறுத்தால், 'வீட்டில் சும்மா இருப்பதற்கு, இந்த வேலையாவது செய்யலாம் இல்லையா...' என்று, எரிந்து விழுகிறாள்பா...

'எனக்கு உடனடியாக, வேறு வேலை ஏதாவது இருந்தா சொல்லுப்பா... இதிலிருந்து தப்பித்து கொள்கிறேன்...' என்றார்.

இவரது புலம்பலை கேட்டபடியே வந்த, குப்பண்ணா, தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, 'இதுல, நிறைய வேலை வாய்ப்பு செய்தி இருக்குப்பா; படிக்கிறேன் கேளு...' என்று படிக்க ஆரம்பித்தார்:

* முதலைகளுக்கு பயிற்சி கொடுப்பவர். எதிர்பாராத முடிவுக்கு தயார் என்றால், உடனே வேலையை ஏற்றுக்கொள்ளலாம்

* குற்றம் நடந்த இடங்களை சுத்தம் செய்பவர். இவற்றில், மனித கொலை மற்றும் அமிலங்களின் சிந்தல்கள் ஆகியவையும் அடக்கம்

* பக்கிங்ஹாம் அரண்மனையில், பாதுகாவலர். ராணுவம் சார்ந்த வேலை. ஆனால், பிரிட்டிஷ் ராணுவத்தினரால், விரும்பப்படாத வேலைகளில் இதுவும் ஒன்று

* பூனைகள் உணவை சோதிப்பவர். பூனைக்கு உணவு கொடுத்து சோதிப்பவர் அல்ல. மாறாக, பூனைக்கு பதிலாக, நீங்க சாப்பிட்டு சிபாரிசு செய்யணும்

* புல் தரையை பராமரிப்பவர். புல்லின் வளர்ச்சியை கண்காணித்து, அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண்டும்.

'எங்கு, எப்படி விண்ணப்பிக்கணும்ன்னு எந்த விபரமும் இல்லாததால், இவருக்கு உதவ முடியல...' என்றார், குப்பண்ணா.

குணாஜி முகத்தில், எள்ளும், கொள்ளும் வெடித்தது.

'மக்களின் கவனத்தை ஈர்த்து, பத்திரிகைகள் விற்க வேண்டும். அதற்காக, அவ்வப்போது சில அதிரடிகளை இப்படி தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவர். கொஞ்ச நாளைக்கு பின், வேறு ஏதாவது கற்பனை செய்தியை போடுவர். இது, வெளிநாட்டு பத்திரிகைகள் செய்யும் யுக்தி...' என்றேன்.

குணாஜியை சமாதானப்படுத்தி அனுப்பியது, தனி கதை!

ப

'மணி... எல்லாருக்கும், டீ கொடுத்துட்டு, இங்க வா... உனக்கு ஒரு தகவல் வைத்துள்ளேன்...' என்றார், உதவி ஆசிரியை ஒருவர்.

வேலைகளை முடித்து, உதவி ஆசிரியையின் இருக்கை அருகே சென்றேன்.

'மணி... இந்த ஆங்கில பத்திரிகையில், விண்வெளி சம்பந்தமா, ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. விண்வெளி ஓடத்தில் பயணிக்கும், வீரர்கள் எல்லாம் பாக்கியவான்கள் என்று, நாம் நினைக்கிறோம். என்ன தான் பேரும், புகழும் கிடைத்தாலும், ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருக்காம்பா... இந்தா, நீயே படிச்சு பாரு... புரியலைன்னா கேளு...' என்று கூறி, பத்திரிகையை என்னிடம் கொடுத்தார்.

அவரது உதவியுடன் கட்டுரையை படித்தேன். அதில்:

விண்வெளி ஓடத்தில் பயணிக்கும் போது, சிரிக்கலாம்; பிரச்னை இல்லை. மாறாக, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதால், கண்களிலிருந்து சிந்திய கண்ணீர், உருண்டை உருண்டையாக திரண்டு, ஒரு கூட்டமாக மாறி, வீரர்களை சுற்றி வரும்

* ரொட்டி சாப்பிடும்போது, உதிரும் துகள்கள், மிதந்து வரும். சோடா குடிக்கும்போது, சிந்தும் துளிகளுக்கும் அதே கதி தான். குடித்து ஏப்பம் விட்டால், வாயினுள், நீராவி பரவி, சுவாசிக்கும்போது, மூக்கினுள் சென்று விடும். உப்பு, மிளகு சிந்தினால், விண்வெளி வீரர்களின் மூக்கினுள் சென்று, தொடர்ந்து தும்மலை ஏற்படுத்துவதோடு, மூச்சு திணறலையும் ஏற்படுத்தும். மேலும், விண்வெளி ஓடத்திள்ள உள் கருவிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இவற்றை, திரவ வடிவில் தயாரித்து வழங்கி, சமாளிக்கின்றனர், அமெரிக்காவின், 'நாசா' விண்வெளி ஆய்வு மைய, விஞ்ஞானிகள்.

* விண்வெளி ஓடத்தினுள் பயணிக்கும் வீரர்கள், 24 மணி நேரத்தில், 16 முறை சூரிய மறைவுகளை சந்திப்பர். இதனால், ஒளியை வைத்து துாங்க இயலாது. இந்த சூழலில், அங்கு துாங்க, பூமியில் இருக்கும் போதே, எப்போது, எப்படி துாங்குவது என்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது

* விண்வெளி வீரர்களுக்கு, 1972 முதல், விண்ணில் மது குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம்... பொதுமக்கள், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது தான். ஆனால், 1969ல், சந்திரனில் காலடி எடுத்து வைத்த வீரர்கள், 'ஒயின்' சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். நோய் முதலியவற்றிலிருந்து தப்பிக்க, உடம்பு வலிமை பெற, ரஷ்ய விண்வெளி வீரர்கள், 'காக் நாக்' என்ற மதுவை சாப்பிட்டுள்ளனர்

* விண்வெளி ஓடத்தில், செக்ஸ்க்கு வாய்ப்பில்லை. மேலும், ஈர்ப்பு கம்மியாதலால், முயற்சியும் கஷ்டம். சுற்றிலும் பலர் இருப்பதால், அதற்கான வாய்ப்பும் கிட்டாது

* விண்வெளி பயணத்தில், தண்ணீரை, தங்கம் போல் பயன்படுத்த வேண்டும். இங்கு, கனமான பொருளாக மாறி விடும் தண்ணீர். அதிக தண்ணீரை சேமித்து வைக்கவும் இயலாது

* சிறுநீர், உமிழ் நீர் மற்றும் கை கழுவும்போது செலவாகும் தண்ணீரை சேமித்து, சுத்திகரித்து, 'ஸ்பாஞ்ச்' மூலம் தண்ணீரை உறிஞ்சி, உடம்பில் பிழிந்து துடைத்துக் கொள்ள வேண்டும்.

- இவ்வளவு கஷ்டங்களுடன், வீரர்களுக்கு, விண்வெளி பயணம் தேவைதானா என, கேட்கிறீர்களா...

விண்வெளி பயணத்துக்கு தேர்வானாலே பெருமை. வெற்றிகரமாக பயணத்தை முடித்து வந்தால், ஜனாதிபதி முதல் பிரதமர் வரை அனைவரையும் சந்தித்து, கை குலுக்கலாம்.

இதை சொல்லிச் சொல்லியே, உலகம் முழுவதும் சுற்றி வரலாம். பல நாடுகள் அழைத்து கவுரவிக்கும். விண்வெளி சரித்திரத்தில் இடம் பெறலாம்; நிறைய பரிசு பொருட்களும், பேரும், புகழும் கிடைக்கும். இது போதாதா!

விண்வெளிக்கு செல்ல, ஏன் பலரும் விரும்புகின்றனர் என்று, இப்போது புரிகிறதா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us