தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 15, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஏ. கவுசியா, நெய்வேலி: 'அரசியல்வாதிகளை விட, சினிமாக்காரர்களுக்கு, சமூக பொறுப்பு அதிகம்...' என்று, இயக்குனர் பாரதிராஜா கூறுகிறாரே...

சபாஷ்... உண்மை தான்...

முதலாமவர், வெள்ளை வேட்டி, சட்டையை, உடல் தெரியாமல் அணிந்து, தோளில் கிடக்கும், 16 முழ துண்டை, அவ்வப்போது துாக்கி விட்டபடி பேசுகின்றனரே... அத்துடன், தாங்கள், பெண்கள் பக்கம் திரும்பி, 'சைட்' அடிப்பது தெரியாமல் இருக்க, கருப்பு கண்ணாடியும் அணிகின்றனரே...

இரண்டாம் நபர்களோ, தங்களது சினிமா பொறுப்புகளை செவ்வனே செய்கின்றனர்.

எப்படி என்றால், மேல் பக்கத்திற்கு, 18 'இன்ஞ்'சும், தொப்புளுக்கு கீழே, வெளியே தெரியாத அளவும் துணி அணிவித்து, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர்.

சபாஷ், பாரதிராஜா அண்ட் கோ!

என். ஜெயன், திருப்பத்துார்: நுனி நாக்கில், ஆங்கிலம் பேசுபவர்கள் எல்லாம் புத்திசாலிகளா?

அப்படி, பேசுபவர்கள் புத்திசாலிகள்; அதைக் கேட்பவர்கள் ஏமாளிகள்!

* ஸ்ரீ பூவராகவன், காங்கேயம்: காஷ்மீர் பிரச்னை பற்றி, ஆரம்பத்தில் அரசு முடிவை எதிர்த்தவர், இப்போது, 'உள்நாட்டு பிரச்னை' என்று திடீர் பல்டி அடித்திருக்கிறாரே, ராகுல்? இவரது தாத்தா - அதாவது, இந்திராவை மணந்தவர், எந்த நாட்டவர் தெரியுமா?

ஈரான் நாட்டை சேர்ந்த, பார்சியன் இனத்தவர். அப்பா, ராஜிவின் மனைவி, இத்தாலி நாட்டை சேர்ந்தவர்! ராகுல், ரகசிய திருமணம் செய்த பெண், தென் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டில் பிறந்தவர். இவ்வளவு நாடுகளுடன் மண உறவு கொண்டவர், இந்தியாவின் காஷ்மீரை பற்றி முரண்பாடாக தான் பேசுவார்.

அப்துல், திருச்சி: அரசியலில் இருந்து விலகுவதாக, ஜெ., தீபாவின் திடீர் அறிவிப்பு பற்றி...

அப்துல், உங்களுக்கு நல்ல நேரம் இருக்குமானால், 'ஸ்டார்' குறியிட்டு பரிசு கிடைக்கும்!

பொறுப்பாசிரியர் தான் முடிவு செய்ய வேண்டும்!

ஜி.கே. துளசி, கடலுார்: 'வாரமலர்' 32 பக்கங்களையும் உருவாக்க, எத்தனை நாள் விரதமிருப்பீர்?

எனக்கு, மூன்று பக்கங்கள் தானே... மீதி பக்கங்களை, பொறுப்பாசிரியர் பார்த்துக் கொள்வார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்வியை, அவரிடம் நான் கேட்டதில்லை!

* டே. கிருபாதேவி, கோவை: ராஜ்யசபாவில் நுழைந்த, வைகோவை புகழ்ந்து, 'நுழைந்தது புலி... பயந்து ஓடுது நரி...' என, 'போஸ்டர்' ஒட்டியுள்ளனரே...

'புலி'க்கு பதிலாக, 'நரி' என்று, உ.பா., அருந்திய பின், 'போஸ்டர்' அச்சடிக்க, அச்சகம் சென்று கொடுத்திருப்பரோ...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us