sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 19, 2020

Google News

PUBLISHED ON : ஜன 19, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை, கன்னியாகுமரி: எளிய வழியில், 'டாக்டர்' பட்டம் கிடைக்க, ஒரு வழி சொல்லுங்களேன்...

ஒன்று: அரசியல்வாதியாக இருக்க வேண்டும்...

இரண்டு: 'மணிபர்சை' காலியாக்க வேண்டும்!

சமீபத்தில், 'டாக்டர்' பட்டம் பெற்ற உறவினரிடம், 'நீ... கல்வியிலே, 'லுாசு' ஆச்சே... 'டாக்டர்' பட்டம் எப்படி வாங்கினாய்?' எனக் கேட்டேன்!

அதற்கு அவர், 'ரொம்ப சிம்பிள், 'பிரதர்...' இரண்டு, 'லேப் - டாப்' வாங்கிக் கொடுத்தேன். இன்று, 'டாக்டர்' ஆகி விட்டேன்...' என்றார்.

நான் நினைத்துக் கொண்டேன்...

'நம்மிடம் அவ்வளவு வசதி இல்லையே...' என்று!

வி. வாசுதேவன், பீடம்பள்ளி, கோவை: பெண்களின் அழகைப் பற்றி வர்ணிக்கும் கவிஞர்கள், ஆண்களின் ஒரு அழகைக் கூட, வர்ணிப்பதில்லையே... ஏன்?

இது, பெண் கவிஞர்களின் கையில் தான் உள்ளது; ஆனால், ஆண் கவிஞர்கள், இத்துறையில் பெண் கவிஞர்களின் முன்னேற்றத்தை விரும்புவதில்லையே! அதனால், அடக்கி வாசிக்கின்றனர், பெண் கவிஞர்கள்!

* மா. அமர்ஜித், சேலம்: தமிழகத்திற்கு அடுத்த முதல்வர், சினிமாவில் இருந்து வரும் சாத்தியம் உள்ளதா?

கண்டிப்பாக உள்ளது; அது, அவர்களின் அடுத்த படத்தில்! தமிழ் வாக்காளர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல!

*எஸ். மாலா, திருப்பூர்: நம் நாட்டில் நடக்கும் லஞ்சங்களை தடுக்க முடியாதா?

அரசியல்வாதிகள் தலையீடு இருக்கும் வரை முடியாது! அரேபிய நாட்டு சட்டங்கள் இங்கு வரவேண்டும்! அப்போது தான், இந்த லஞ்சப் பேர்வழிகள் ஒழிவர்!

கே.ஆர். உதயகுமார், சென்னை: துாங்க செல்லும்போது, இனிமையான பழைய பாடல்கள் கேட்பதுண்டா?

என்னிடமிருந்து, இரண்டு நல்ல பழக்கமும் எங்கோ ஓடி விட்டது... அது, புத்தகம் படிப்பது மற்றும் பாட்டு கேட்பது... இப்போதெல்லாம், தலையணை கிடைத்ததும், 'கொர்' தான்!

லலிதா செல்லப்பா, சென்னை: அழைப்பிதழ்களை நேரில் சென்று கொடுப்பது, தபாலில் அனுப்புவது போன்றவை நிறுத்தப்பட்டு, 'பேஸ்புக்' மற்றும் 'வாட்ஸ் - ஆப்'பில் அனுப்புவது, இப்போது, 'பேஷன்' ஆகி விட்டதே... இது வரவேற்க தக்கதா?

வரவேற்க தக்கதா என, ஏன் கவலைப்படுகிறீர்கள்... 'சால்வை... பொக்கே' வாங்கும் செலவு மிச்சம்! நீங்களும், அதே, 'பேஸ் புக் - வாட்ஸ் ஆப்'பில் வாழ்த்துகள் சொன்னால், செலவு மிச்சமாகும் தானே!






      Dinamalar
      Follow us