sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : பிப் 02, 2020

Google News

PUBLISHED ON : பிப் 02, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மல்லிகா அன்பழகன், சென்னை: பரட்டையும், சப்பாணியும் கூட்டணி அமைத்தால், ஆட்சியைப் பிடிக்க முடியுமா?

இப்போது, அவர்களிடம் லஞ்சப் பணம் கிடையாது... சினிமாவில் சேர்த்தது தான்! அவற்றை இழப்போம் என்ற உணர்வு வரும்போது தான், முதல்வர் கனவை மறப்பர்!

கே. வேலுச்சாமி, தாராபுரம்: செய்தி சேனல்களில், விவாதம் என்ற பெயரில், அரசியல்வாதிகளை வைத்து நடத்தப்படுவதை ரசிக்க முடிகிறதா?

ஆஹா... இன்று திங்கள் கிழமை. உபயோகமாக வேலை செய்ய முடியும் என்று நினைத்து முடிப்பதற்குள்ளேயே, சனிக்கிழமை வந்து விடுகிறது. நேரம் அவ்வளவு வேகமாக ஓடுகிறது. நீங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். கடந்த நேரம் திரும்பக் கிடைக்காது!

* ம. விஸ்வநாதன், கோவை: அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்... இனி, எங்கள் இருவரின் வாழ்க்கையை எப்படித் தொடர வேண்டும்?

மனைவியின் முழுப் பொறுப்பிலும் பங்கேற்க வேண்டும்; இருவருக்கும், இது சந்தோஷத்தைத் தரும்!

ஜெ. நெடுமாறன், சென்னை: 'சசிகலா விடுதலையானால், அ.தி.மு.க.,வினர், அவர் கட்சிக்குச் செல்வர்' என, சுப்ரமணியசாமி சொல்கிறாரே...

அவர் ஒரு அரசியல் கோமாளி! இவர்களின் பேச்சை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

மு. நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: ஆண்கள் நகை அணியலாமா?

தாம் பணக்காரர் என, 'ஆப்போசிட் செக்ஸ்' இடம் காட்டிக் கொள்ள அணிகின்றனர். ஆனால், இக்காலப் பெண்கள், இவர்களை, 'ரவுடி'களாகத் தான் மதிக்கின்றனர்!

பா. ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி: உங்களுடைய அசையும் சொத்து எவ்வளவு; அசையா சொத்து எவ்வளவு?

கையும், காலும் முதலாவது; இண்டாவது, மூளை!

பி. பரத், சிதம்பரம்: 'ஹெல்மெட்' அவசியம் போட்டே ஆக வேண்டுமா?

மனித உயிர்களைக் காப்பாற்ற போடப்பட்ட சட்டம் இது! அவரவர் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

* என். சொக்கலிங்கம், திருச்சுழி: வாழ்வில் வேகமாகவும், எளிதாகவும் முன்னேற வழி இருக்கா?

படிப்பில் சுமார் என்றால், வெள்ளை வேட்டி, அதே நிறத்தில் சட்டை; தோள் துண்டு; ஓரளவு படித்தவர் என்றால், 'காக்கி' உடையும் வழி செய்து கொடுக்கும்!






      Dinamalar
      Follow us