தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஆக 02, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆர். பிரசன்னா, திருச்சி: போகிற போக்கைப் பார்த்தால், மின்துறை, ரயில்வே, அஞ்சல் துறை அனைத்துமே, தனியார் மயமாகி விடும் போலுள்ளதே!

எதற்கெடுத்தாலும் கொடி பிடிப்பது நின்று விடும்! மக்களுக்கு நல்ல சேவை கிடைக்கும் தானே!

* ஜி. குப்புசாமி, சங்கராபுரம்: ரவுடிகளை, 'என்கவுன்டரில்' போட்டுத் தள்ளுவது சரிதானே சார்?

ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த, ராஜா மான்சிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, 11 போலீசாருக்கு, 35 ஆண்டு கால கோர்ட் விசாரணைக்கு பின், சமீபத்தில், அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது கோர்ட்! இத்தனை, 'சுறுசுறுப்பு'க்கு பதில், 'என்கவுன்டர்' சரி தான் எனத் தோன்றுகிறது!

பி.ஜி.பி. இசக்கி, சென்னை: நேரத்தை வீணடிப்பதில் முன்னணி ஆண்களா, பெண்களா?

முதலாமவர் தான் முன்னணியில் இருந்தார். 'டிவி' தொடர்கள் பெருகிய பின், இரண்டாமவர் முன்னுக்கு வந்து விட்டார்!

பாரதி முருகன், அன்னியூர், விழுப்புரம்: காவல்துறை, யாருக்கு நண்பன்?

போலீசார், மக்களின் நண்பர் தான். ஒரு சிலர், அப்படி இருப்பதில்லை என்பதால், அத்துறையையே எதிரிகளாக பார்ப்பது தவறாகும்!

ஜி. வர்ஷிணி, கோவை: உங்களிடம் துப்பாக்கி இருக்கிறதா?

ஓ! லைசென்சுடன். ஒரு ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்ட போது வாங்கியது; பயிற்சிக் கூடத்தில் சுட்டதோடு சரி!

எஸ். கந்தர்வ், புதுச்சேரி: நமீதா வருகைக்குப் பின் தமிழக, பா.ஜ., நிலவரம் எப்படி இருக்கிறது?

முதல்வர் பதவி, கனவில், கண் முன்னே நின்று கொண்டிருக்கிறது!

* மா. அசோகன், சிவகங்கை: தனியார், தமிழ், 'டிவி' செய்தி வாசிப்பாளர்கள், உச்சரிப்பில் திணறுகின்றனரே...

உண்மை தான்! தனியார் தமிழ், 'டிவி' அதிபர் ஒருவர், சமீபத்தில், என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நடிகர் ஒருவர் கட்சிக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட வேண்டுகோள் விடுத்தார்.

'என்ன, ஏது காரணம் என்பதை எழுதி அனுப்புங்கள்...' என்றேன்.

'எனக்கு, தமிழ் எழுதத் தெரியாதே...' என்றாரே பார்க்கலாம்.

அப்புறம், அவர்களது செய்தி வாசிப்பு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us