தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 24, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ். கோவிந்த், கோவை: மனிதர்கள்... நாய்... என்ன வித்தியாசம்!

யார் எதிரிகள் என்பதை, மனிதனால் விரைவில் கண்டுபிடித்து விட முடியாது! ஆனால், நாய்கள் உடனே கண்டுபிடித்து விடும்; இது தான் வித்தியாசம்!

கு. ஜெயக்குமார், சென்னை: கூவம் என்ற பெயர், அந்த ஆற்றிற்கு எப்படி வந்தது?

சென்னைக்கு, 320 கி.மீ., துாரத்தில், கூவம் என்ற கிராமத்தில் உற்பத்தி ஆகி, இங்கு பாய்ந்து வந்து கடலில் கலக்கிறது; இப்போது அது நன்னீர் ஆறு அல்ல; சாக்கடை ஆறு!

ஆர். நாகநாதன், வேலுார்: என் எதிரிக்கு புத்தி கற்பிக்க விரும்புகிறேன்; நான் என்ன செய்ய வேண்டும்?

நன்மையைச் செய்து விடுங்கள்!

அவனை பழி வாங்க வேண்டும் என்ற நினைவு வரும்போது, மன அமைதியை இழந்து விடுகிறோம்! நம் மன அமைதி போய் விட்டால், அதை விட இழப்பு ஏதுமில்லையே!

ஜி. விஜயகுமார், நீலாம்பூர், கோவை: சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டம் நன்மையா?

நன்மையே! சாலை பெரிதானால், போக்குவரத்து சுலபமாகும்! சாலைக்காக எடுக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய விலையும் கிடைக்கும் தானே!

ப. செல்வன், சென்னை: அலோபதி, ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதம்... இதில் உங்களுக்கு பிடித்த வைத்தியம் எது?

ஆரம்பத்தில், அலோபதி... அப்புறம், ஆயுர்வேதம் தான் தோதாக இருக்கிறது... சீக்கிரம் குணமாகி விடுகிறது! ஓமியோபதி, சித்தா பக்கம் போக, வாய்ப்பு கிடைக்கவில்லை!

* ச. மோகித், தஞ்சாவூர்: 'நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து, புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்' என்று, உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதே...

மிகச் சரியானதே... பதவியை மட்டும் பறித்தால் போதாது... சரியான தண்டனையும் தரவேண்டும்!

வி. கோபாலன், சென்னை: என் நண்பன், 'நாளை... நாளை...' என்கிறான். இதன் பொருள் என்ன?

இன்றைய உழைப்பின் பின் பலன் தானே, நாளை! இன்றைய உழைப்பின் பலன் தான் நாளை என்பதை, உங்கள் நண்பர் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்; பாராட்டுக்கள்!

* ஆர். சந்திரகுமாரி, பொள்ளாச்சி: இந்தியா விடுதலையாகுமுன், மகாராஜாக்கள் இருந்தனரே... அவர்கள் இப்போது எப்படி இருக்கின்றனர்?

கலர், கலர் வேட்டி கரைகளுடன் உள்ளனரே... நீங்கள் கவனிக்கவில்லையா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us