sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மார் 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2021


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ். ராஜேஸ்வரி, மதுரை: நடிகர் கார்த்திக், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார்?

கார்த்திக்கே எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை; இதில் கூட்டணி அமைப்பு வேறா?

பி. சிவக்குமார், நாகமலை புதுக்கோட்டை: விவசாயிகள் போராட்டம் நியாயமானது தானா அல்லது எதிர்க்கட்சிகளின் துாண்டுதலா?

தரகர்களின் துாண்டுதலால் ஆரம்பமானது... பின்னர், எதிர்க்கட்சிகள் பின் நிற்கின்றன. இந்தியாவில் மொத்தம் மூன்று மாநிலத்தவர் தான் போராடுகின்றனர். தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் போராட்டம் கிடையாதே!

*எம்.எஸ்.பார்த்தசாரதி, கோவை: எத்தனை, 'சீட்'டுகள் தந்தாலும் சரி என்கிறாரே வைகோ...

இவர் கட்சி ஆரம்பித்ததே, தி.மு.க.,வை எதிர்த்துத் தான்! இப்போது தான் அவரின் பலமே புரிந்திருக்கிறது என்பதை, அவரது அறிக்கை விளக்குகிறது!

அப்துல், திருச்சி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 5 ரூபாய்க்கு சாப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளாரே?

தேர்தல் நெருங்குகிறதே... அதன் பயம் தான், 5 ரூபாய் சாப்பாடு!

என். ஜெயன், திருப்பூர்: தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ந்து வருகிறதா; தேய்ந்து வருகிறதா?

காணாமல் போய் வருகிறது! ராகுல் வருகைக்குப் பின் கூட, தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை!

க.மு. கணேசன், சென்னை: பணக்காரர்களுக்கு எதிர்காலம் உண்டா?

இல்லை! அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் கறுப்பு பணத்தை தான், இந்த அரசு செல்லாது என்று அறிவித்து விடுகிறதே!

* க. ராஜேந்திரன், மதுரை: சசிகலா வரவால், அ.தி.மு.க., ஓட்டு வங்கி பாதிக்கப்படுமா?

நிச்சயமாக பாதிக்கப்படாது! வாக்காளர்கள் எல்லாம் இப்போது முட்டாள்கள் கிடையாது; ஊழல் செய்து, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவரை ஆதரிப்பதற்கு!

பி. பாரதி, பெங்களூரு: உங்கள் கார்ட்டூன் முகம் வரைந்தது யார்? எப்படி தேர்வு செய்தீர்கள்?

நமது முன்னாள் கார்டூனிஸ்ட், பீட்டர் தான்; 10 முகங்களை வரைந்து, பொறுப்பாசிரியரிடம் காட்டினார். அவர் தேர்வு செய்த முகம் தான், இது!

கவுசியா அஜீஸ், நெய்வேலி: 'நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, தமிழகம் வெற்றி நடை போடும்...' என்று, அக்கட்சியின் தலைவர், சீமான் சொல்லி இருக்கிறாரே...

வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது; வாய்ப்பு கிடைத்தால் அவர் இடத்தை, சீமான் நிறைவேற்ற வாய்ப்புள்ளது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us