தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஏப் 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர். பாலமுருகன், நெல்லை:சந்தர்ப்பங்கள் தானே மனிதனை உயர்த்துகிறது...

சந்தர்ப்பங்களை தேடி அலைந்து ஏற்படுத்திக் கொள்பவனே உயர்கிறான்; சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து காத்திருப்பவன், துாங்கிக் கொண்டிருக்கிறான்!

என். மனோகரன், நாகர்கோவில்:அரசியல்வாதியாக விரும்புகிறேன்... என்ன செய்ய வேண்டும்?

மூன்று விஷயங்கள் செய்ய வேண்டும்! முதலாவது, மன சாட்சியை மறந்து விடுங்கள்; இரண்டாவது, காதுகளை அடைத்துக் கொள்ளுங்கள்; மூன்றாவது, கண்களை மூடிக் கொள்ளுங்கள்! இப்ப, நீங்கள் அரசியல்வாதி ஆகி விட்டீர்கள்!

* எஸ். ஜெயஸ்ரீ, புதுவை: பெண் கவிஞர்கள் திரைப்படங்களில் இல்லையே ஏன்?

கவிதை எழுதி, வீண் பொழுதுபோக்குபவர்கள் அவர்கள் இல்லை; அவர்கள், காரியவாதிகள்!

எம். மல்லிகா, சென்னை: உங்கள் ஆபீசுக்கு வரும், 'போன் காலில் கிராஸ் டாக்' கேட்பதுண்டா?

டீ கொடுத்து முடித்த பின், மாலை, 4:00 மணிக்கு மேல் கேட்பதுண்டு! ஆனால், அவர்கள் பேசி முடித்ததுடன், போனில் வந்த, 'வாய்ஸ்' போல, அவர்களை கலாய்ப்பதுண்டு!

எஸ். வெங்கடேஷ், துாத்துக்குடி: என் நண்பனுக்கு மூளை அதிகமாக வேலை செய்கிறது... இது எப்படி?

ஏராளமாக கடன் வாங்கி இருப்பார். கடனை எப்படி அடைப்பது... இல்லை, எப்படி தப்பிப்பது என்றெல்லாம் இருக்கும்!

* எஸ். ஸ்ரீனிவாசன், சிதம்பரம்: தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தால் தமிழகத்திற்கு நல்லது?

எனக்கு பிடித்த தமிழகத்தை உருவாக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்தால், எனக்கும் மகிழ்ச்சி; தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி!

எஸ். ஜானகி, பொள்ளாச்சி: ஞாபக சக்தி எனக்கு குறைவாக இருக்கிறது... அதை வளர்த்துக் கொள்ள வழி சொல்லுங்கள்...

பயிற்சி தான் தேவை. அதனால், அடைய முடியாதது ஏதும் இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us