தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூன் 12, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*எம்.குருசாமி, திருவள்ளூர்: நடைமுறையில் இருக்கும் சீர்திருத்த எழுத்தை பயன்படுத்தாமல், பழைய முறையிலேயே எழுதுவதால் தவறு இல்லையே...

தவறு இல்லைதான்... நீஙகள் எழுதுவது இளைய தலை முறைக்கு புரியாது போகும்; பரவாயில்லையா? இப்போது, +2 படிக்கும் மாணவனுக்கு, பழைய எழுத்தின் பரிச்சயமே இருக்காது - சோதனை செய்து பாருங்களேன்.

***

*வி.அரவிந்த், சென்னை: எல்லா மாவட்டங்களிலும், எல்லாத் துறை களிலும் போட்டி போட்டு, இன்ன தொகை என்று நிர்ணயம் செய்து, அரசு ஊழியர்கள் லஞ்சம் வசூல் செய்கின்றனரே... விஷயம் இப்படி இருக்க, லஞ்ச ஒழிப்புத் துறை ஒன்றை நம் அரசு வைத்துக் கொண்டு, அதற்கு ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?

லஞ்ச ஒழிப்புத் துறையினரை நொந்து பயன் இல்லை. புகார் கொடுத்து, அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது உண்டா? அவரவர் தம் வேலை முடிந்தால் சரி என, கணக்கு பார்க்காமல் காசைக் கொடுக்கின்றனர். யாரை நொந்து கொள்வது நாம்?

***

*வி.ராமகிருஷ்ணன், மதுரை: சிலர், 'படம்' என்ற பெயரில், பாடாவதியாக, 'பிலிம்' சுருள்களை வீணாக்கு கின்றனரே...

உடலை வருத்தி, 'க்யூ'வில் நின்று காசு, பணம் என்று பார்க்காமல், டிக்கெட்டை, 'பிளாக்'கில் வாங்கி, மூட்டைப் பூச்சி கடியில் கூட, படம் பார்க்க அனேகர் (நீங்களும்?) தயாராக இருக்கும் வரை, மதிப்பு மிக்க நம் அந்நிய செலாவணி, 'பிலிம்' என்ற ரூபத்தில் வீணாகத்தான் செய்யும்.

***

** எச்.மார்டீன், கோவை: நேருவுக்கு பதில், நேதாஜி இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருந்தால், இந்தியா இன்னும் முன்னேறி இருக்குமா?

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல பெரியவர் கள், அவர்களில் சிலர் எழுதிய நூல்களெல்லாம் கூறுவது: இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், முதல் பிரதமராக அனுமதிக்கப் பட்டு இருந்தால், வழ, வழ, கொழ, கொழ நிலை இன்று இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்காது என்பதே! நேதாஜியைப் பொறுத்தவரை, 'மிலிட்டரி' குணம் கொண்டவர். அதே குணத்தை ஆட்சியிலும் செலுத்தும் வாய்ப்பு இருந்திருக்கும்.

***

*ஜி.தங்கராஜ், அருப்புக் கோட்டை: ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?

எனக்கு வேலையே ஓய்வு... ஆபிசில் எந்த நேரமும் வேலை அல்லது வேலையைப் பற்றிய சிந்தனை தான்! காலில், சக்கரம் கட்டி ஓடும் இந்தக் காலத்தில் ஓய்வு பற்றிய சிந்தனை கூட இருக்கக் கூடாது.

***

** இ.அ.அருள்ராஜ், அரசூர்: தேவைப்படும்போது தம் உயிரையே போக்கிக் கொள்ளும் தீவிரவாதிகள் தோன்ற காரண கர்த்தாக்கள் யார்?

சுயநலம் பிடித்த கயவர்கள்! தம் சுயநலத்திற்காக, அப்பாவி களைப் பிடித்து, அவர்களை, 'பிரெயின் வாஷ்' - மூளைச் சலவை செய்கின்றனர். கயவர்களின் உண்மையான உள்நோக்கம் புரியாத அப்பாவிகள், மூளைச் சலவை பெற்று, தம்மை மாய்த்துக் கொள்கின்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us