தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூலை 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லெ.நா.சிவக்குமார், சென்னை: கப்பல் பயணம் செய்ததுண்டா?

ஓ! இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு! கப்பலின் உள் அமர்ந்து, உ.பா.,வை கவனித்துக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா. நான், வெளியே நின்று கடலை கவனித்துக் கொண்டிருந்தேன்!

* எம். முத்தையா, திருப்பூர்: 'டிவி' செய்திகளை பார்ப்பது பயமாக இருக்கிறதே... பாலியல் கொலை, கொள்ளை என, 'லைவ்' ஆக காட்டுவது மனதை அச்சம் கொள்ளச் செய்கிறதே...

பார்க்காதீர்கள்; நானும் பார்ப்பதில்லை. அதற்கு பதில், சினிமா தமாஷ்களை காட்டும், 'சேனல்'களைப் பாருங்கள்; அச்சம் தெளியும். கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழியும்!

என். ஆசைத்தம்பி, சென்னை: எழுத்தாளர், ஜே.டி.ஆர்., எப்படி இருக்கிறார்?

'ஹார்ட் அட்டாக்' வந்து நலமாகி விட்டார். பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால், 'ஜாலி'யாக வீட்டில் இருக்கிறார். இப்போது, தன் பெண்ணுக்கு திருமண மண்டபம் தேடிக் கொண்டிருக்கிறார்!

* என். பரமகுரு, பெரியகுமட்டி, கடலுார்: பொதுச்செயலராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்றிருக்கும் கமல்ஹாசனுக்கு, அரசியல் எதிர்காலம் உண்டா?

கட்சியின் எல்லா பொறுப்பையும் அவர் தான் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகி விட்டதே; எல்லாரும் தான் கழன்று செல்கின்றனரே... நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள், அவரின் அரசியல் எதிர்காலத்தை!

சி. ரகுமுருகன், விழுப்புரம்: எங்கள் ஊர், விவசாயத்தை நம்பி உள்ளது. ஆனால், அடிக்கடி, 'பவர் கட்' ஆகிவிடுகிறதே... என்ன செய்வது?

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பேசி, நரி குறவர்களிடம், அணிலையும், பெருச்சாளிகளையும் பிடிக்கச் சொல்லுங்கள்... 'பவர் கட்' ஆகாமல் இருக்கும்!

பி. மோகன்ராஜு, சென்னை: மோடிக்கு மாம்பழம் அனுப்பியுள்ளாரே மம்தா?

மறந்து விட்டார் போலும்; திருநெல்வேலி அல்வாவிற்கு பதில், மாம்பழம் அனுப்பி விட்டார்!

* ஆர். ஜெயராமன், தென்காசி: அரசியல் மேடைகளில் அறுப்பவர்களை என்ன செய்யலாம்?

இந்தக் கூட்டத்திற்கெல்லாம் ஏன் செல்கிறீர்கள்? அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, உங்கள் கழுத்தில், 'பிளேட்' மாலை அணிந்து கொள்ள வேண்டுமா! உருப்படியான வேலை இருந்தால் பாருங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us