தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆர். நவின் கார்க்கி, வெள்ளியக்குடி, கடலுார்: இன்று பத்திரிகை வாசிப்பு குறைந்து வருகிறதே... அது பற்றி...

உங்களது கிராமமான வெள்ளியக்குடியில் குறைந்திருக்கலாம்... ஆனால், நமது நாளிதழ் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது! அதுவும், ஞாயிறு விற்பனை மற்ற தினங்களை விட, 2 லட்சம் அதிகம்!

த. சிவாஜிமூக்கையா, சென்னை: இலங்கை அகதிகள் முகாம், இனிமேல், 'இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரே...

எப்படி பெயர் மாற்றினாலும் அவர்கள் அகதிகள் தான். அவர்களது நாட்டுக்கு திரும்ப அனுப்பி, இலங்கை தமிழர்களாக வாழ வைக்க வேண்டிய வேலைகளை பார்க்கட்டும் முதல்வர்!

* அப்துல், திருச்சி: 'அரசு பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்...' என்று, சட்டசபையில் கல்வி அமைச்சர், மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளாரே...

அதற்கு முன், பதவியில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,களுக்கு, குறிப்பாக, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழ் பேச, உச்சரிக்க கற்றுக் கொடுக்கட்டும்!

ப. லட்சுமி, கோட்டூர், தேனி: தோற்றம், படிப்பு, குணம் - ஒரு பெண்ணுக்கு எது அழகைத் தரும்?

தோற்றம், படிப்பு இரண்டையும் விட, படிப்பும், குணமும் தான் அழகைத் தரும்... இதுதான் நிதர்சனமான உண்மை!

* பெ. பொன்ராஜபாண்டி, மதுரை: தி.மு.க., அரசின், ஒரு வேலை, ஒரு டெண்டர், ஒரு நபர் என்ற புதிய நடைமுறை பற்றி?

தாராள குணம் வந்து விட்டது ஸ்டாலினுக்கு! தி.மு.க.,வினர் அனைவரும் கொள்ளையடிக்க, கோடீஸ்வரர்களாக வழி செய்து கொடுத்து விட்டார்!

கே.ராதாகிருஷ்ணன், நெய்வேலி: வாரமலர் அட்டைப் படத்தில், நடிகை படத்தை மட்டும் தான் போடுவீரோ... நடிகர் படத்தை போடாதது, ஆண் (நம்) இனத்திற்கே செய்கிற துரோகமாக தெரியலையா?

எம்.ஜி.ஆர்., - அப்துல்கலாம், கிருஷ்ணர், விநாயகர் மற்றும் காந்திஜி போன்றோர் படங்கள் இடம்பெறுகிறதே... இவர்கள் எல்லாம் ஆண்கள் இல்லையா!

அது சரி... பெண்கள் படங்கள் வெளியாவதால், என்ன குறைந்து போய் விட்டது என்று கேட்கிறார், பொறுப்பாசிரியர்.

என். கல்பனா, நெல்லை: உங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே...

நீங்கள் தொடர்ந்து, 'வாரமலர்' பா.கே.ப., - கேள்வி பதில் படிக்காதவர் என்பது புரிகிறது; தொடர்ந்து படியுங்கள் புரியும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us