தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.எஸ். திரவியம், தேனி: 'சேனல்'களை கொண்டு வரும், 'கேபிள் டிவி' நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு, அவற்றில் திரும்பத் திரும்ப வரும் விளம்பரங்களைத் தான் பார்க்க வேண்டி உள்ளதே... இதற்கு தீர்வு இல்லையா?

ஏன் இல்லாமல்... உங்கள் கையில் தான், 'ரிமோட்' உள்ளதே... 'சேனலை' மாற்றி விடலாம் தானே!

* கே. கோப்பெருந்தேவி, சென்னை: என் மகன் ஜாதகப் பொருத்தம் பார்த்து, பார்த்து வரும் வரன்களை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறான். வயதும், 30ஐ தாண்டுகிறது. அவனுக்கு நல்ல அறிவுரை கூறுங்களேன்...

எனக்குத் தெரிந்த ஒரு பெரியவரின் மகன் சொன்னது... அவரும் இப்போது உயிருடன் இல்லை. பெரியவருக்கு ஐந்து மகன்கள். பெண்ணின் ஜாதகத்தை வாங்கி, அதற்கு ஏற்றார் போல் மகனின் ஜாதகத்தை, ஜோசியரிடம் கொடுத்து மாற்றி விடுவாராம். எள்ளு பேரன், பேத்தி வரை பார்த்து விட்டுத்தான் மறைந்தாராம்!

கா. இளஞ்செழியன், தேனி: 'டாஸ்மாக்' விடுமுறைகளை முன்னரே அறிவிக்கின்றனரே... ஏன்?

'குடி மக்கள்' ஏமாந்து போய் திண்டாடி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான்! முன்னரே அறிவித்து விட்டால், 'ஸ்டாக்' வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா... 'டாஸ்மாக்' ஒருநாள் வருமானமும் போகாதே!

சி. செல்வம், கல்பாக்கம்: சைக்கிளில், 'பயணம்' சென்று இருக்கிறீர்களா?

இல்லை! டீ வாங்குவதற்கும், போஸ்ட் ஆபீஸ் செல்வதற்கும் மட்டுமே, 'அட்லஸ்' சைக்கிள். பயணங்களுக்கு - நெடுஞ்சாலைகளில், 200 கி.மீ., வேகத்தில், 'மசாலா ரொட்டி' அதாவது, 'மசராட்டி' வண்டி தான்!

எஸ்.செல்வி, விளாத்திகுளம், துாத்துக்குடி மாவட்டம்: என் தோழி, மவுனத்தை விட சிறந்த மொழி ஏதும் இல்லை என்கிறாளே... இது உண்மையா?

உண்மை தான்! சிரித்த முகத்தோடு மவுனமாக இருந்தாலே, வாதங்களையும், சண்டைகளையும் தவிர்த்து விடலாமே!

ஆர். கோபால்தாஸ், முக்கூடல், நெல்லை: என் நண்பன் ஒருவன், எப்போதும், 'பாசிட்டிவ் ஆட்டிட்யூட்' உள்ளவனாக இருக்கிறானே...

அவர், எதிர்மறை எண்ணம் கொண்டவர் அல்லர்... நல்லதே நடக்கும் என்ற எண்ணம் கொண்டவர். நடப்பது எல்லாமே நன்மைக்கு நடப்பதாகவே எடுத்துக் கொள்பவர். எனவே, நண்பரின் மனம் அமைதியாக, எவ்வித பதற்றமுமின்றி இருக்கும்; வாழ்த்துக்கள் அவருக்கு!

* ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி: 'என்கவுன்டர்'கள் பற்றி...

போலீசாரையே வெட்டிக் கொலை செய்யத் துணிபவர்களை, போட்டுத் தள்ளத்தான் வேண்டும். 'என்கவுன்டர்' செய்யாமல் கோர்ட்டுக்குச் சென்றால், தீர்ப்பு வர, 100 ஆண்டுகளாகும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us