தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 15, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* டி. ரவீந்திரன், சென்னை: 'பா.ம.க., ஆட்சிக்கு வந்து, மதுக்கடைகளை மூடட்டும்...' என்று சொல்கிறாரே, அமைச்சர் துரைமுருகன்...

'கட்சி ஆரம்பித்து, 32 ஆண்டுகளாகியும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை...' என்று புலம்புகிறார், பா.ம.க.,வின் அன்புமணி. 320 ஆண்டுகள் ஆனாலும், பா.ம.க., ஆட்சிக்கு வரப்போவதில்லை... தமிழகத்தில் மது நீடிக்கும்!

ஆர். முருகன், நெல்லை: கெடுதிகள் எதனால் வரும்... உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களேன்...

கடன் பட்டார் வாழ்வு... கண்டித்து வளர்க்காத பிள்ளைகள்... பிரிவு ஏற்பட்டால்... கோபம் அதிகமானால்... சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகளால், கெடுதிகள் வரக்கூடும்!

வி. பார்த்தசாரதி, சென்னை: விடுதலை சிறுத்தை, திருமாவளவனை, கர்நாடக மாநிலத்தில் துரத்தி, துரத்தி அனுப்பி விட்டனரே...

இனி, தமிழகத்திலும் அது போலதான் நடக்கப் போகிறது... பொறுத்திருந்து பாருங்கள்...

பி. வசந்தா, விருதுநகர்: கைம்மாறு கருதாதவர்கள் என்று யாரை எல்லாம் சொல்லலாம்?

அவர்களை எல்லாம் மழையுடன் ஒப்பிடலாம்... அவர்கள் மாற்று உதவி எதையும் எதிர்பார்த்து செய்ய மாட்டார்கள்!

* த. மூக்கையா, சென்னை: 'தே.மு.தி.க., பெரிய சக்தியாக உருவெடுக்கும்...' என்கிறாரே, அக்கட்சியின் பொருளாளரும், தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா...

இம்மாதிரியான, தமாஷ் பேட்டிகளை படித்து, ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள் மூக்கையா... நேரம் நமக்கு மிக முக்கியமானது!

தி. முருகேசன், திருப்பூர்: ஒருவனுக்கு, வெற்றி எப்போது கிடைக்கும்?

அவர் தன் குறிக்கோளிலும், முயற்சியிலும் சுறுசுறுப்பு கொடுத்து விட்டால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இதையெல்லாம் மறந்து விட்டு, விதியின் மீது கவனம் வைக்கக் கூடாது!

என். கதிர்வேல், நெல்லை: என் நண்பன் ஒருவன், எப்போதும் மன அழுத்தத்துடன் உள்ளானே...

அவரது துயரங்களை, ஆத்மார்த்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; அப்போது, மன அழுத்தம் போய் விடும்!

சி. கணேசன், கள்ளக்குறிச்சி: எனக்கு மறதி நோய் இருக்கிறதே... இதற்கு தடுப்பூசி ஏதும் உண்டா?

மருத்துவ நண்பரிடம் கேட்டேன்... இதுபற்றிய ஆராய்ச்சி இன்னும் நடந்து வருகிறதாம்... அதனால், இப்போதைக்கு தடுப்பூசி எதுவும் இல்லை எனக் கூறினார்!

சி. விஷ்ணு, நெல்லை: தங்கள் ஆட்சியின் நன்மை, தீமைகளை தினமும் ஆராய்ந்து, அதை சரி செய்யாத ஒரு அரசின் நிலை என்னவாகும்?

மெல்ல, மெல்ல தன் ஆட்சியை இழந்து விடும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us