sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 11, 2022

Google News

PUBLISHED ON : செப் 11, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தி. மகாராஜன், சின்னமனுார், தேனி: 'நான் அதிகாரத்தில் இருந்திருந்தால், 'நீட்' தேர்வை உடனே ரத்து செய்திருப்பேன்...' என்கிறாரே, திருமாவளவன்...



தமாஷ் நடிகர், யோகிபாபுவுக்கு அண்ணனாகி விட்டார், திருமாவளவன்... அதிகாரத்துக்கும் வர முடியாது என்பது தெரிந்தும் இப்படி, 'ஜோக்' அடிக்கிறாரே!

ப. சோமசுந்தரம், சென்னை: 'என் உயிர் உள்ள வரை, பரந்துார் விமான நிலையத்தை வர விடமாட்டேன்...' என, சீமான் பேசியிருக்கிறாரே...



பாவம்... சின்ன வயதிலேயே, 'போய்' விடுவார் போலிருக்கிறதே!

ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி: லென்ஸ் மாமாவுக்கு, 'மிலிட்டரி' சரக்கு பிடிக்குமா? அனுப்பி வைக்கட்டுமா? கேட்டுச் சொல்லுங்களேன்...



அவருக்கு, ஸ்காட்லாந்தில் தயாராகும், 'டபுள் பிளாக்' விஸ்கி மட்டும் தான் பிடிக்கும்... எப்போதும், எந்த, 'பைவ் ஸ்டார்' ஹோட்டல் ஆனாலும், எவ்வளவு செலவானாலும் அதைத்தான் எடுத்துக் கொள்வார்!

ரா. அருண்குமார், புதுவை: பா.ஜ., இதுவரை மொத்தம், 5,500 கோடி ரூபாய்க்கு எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கியிருப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளாரே...



இவருக்கும் அதில் பங்கு கிடைக்கவில்லையே என்ற குறையோடு, இப்படி ஒரு அறிக்கை கொடுத்திருப்பாரோ என்னவோ...

அ. கோவிந்தன், நெல்லை: முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தான், ஹிந்து கோவிலில், முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, துர்கா பெயரில் அர்ச்சனை செய்திருக்கிறாரே... மசூதியில் தொழுகை நடத்தி இருக்கலாமே...



ஒருவேளை, திருமதி துர்கா அதற்கு அனுமதி அளிக்கவில்லையோ என்னவோ!

* எஸ். ராஜ்குமார், சிவகாசி: சென்னை - சேலம் எட்டு வழிச் சாலையை, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்தபோது, எதிர்த்த தி.மு.க., இப்போது, 'எட்டு வழி சாலை திட்டத்திற்கு, தி.மு.க., எதிரி அல்ல...' என, அமைச்சர் வேலு கூறியிருக்கிறாரே...



இப்போது, 'பையை' நிரப்பிக் கொள்ள நேரம் வந்து விட்டதல்லவா... அதனால், 'ஓகே' சொல்லி இருக்கின்றனர்!

ஆர். தேவா, திண்டுக்கல்: சமீபத்தில், இரு தினங்கள் சென்னை வந்து சென்றேன்... அப்பப்பா... எப்படி வசிக்கிறீர்கள் அந்த ஊரில்?



சமீபத்தில் பெங்களூரு சென்று வந்தேன்... 'பிளையிங்' நேரம் சென்னையில் இருந்து ஒரு மணி நேரம் தான்... விமான நிலையத்திலிருந்து தங்கும் இடம் செல்ல, 1:30 மணி நேரம் ஆகிவிட்டது... சென்னை தேவலாம்!

ராம கணபதி, துாத்துக்குடி: வெறும் உடம்பில், 'சென்ட்' அடிப்பது நல்லதா, சட்டையைப் போட்டுக் கொண்டு அடிப்பது நல்லதா?



வெறும் உடம்பு மற்றும் அக்குளில், 'பாடி ஸ்ப்ரே' அடித்துக் கொள்ள வேண்டும்... சட்டையில், 'சென்ட்' அடித்துக் கொள்ள வேண்டும்!






      Dinamalar
      Follow us