தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : நவ 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ். வைத்தியநாதன், மதுரை: 'மொபைல் போன் வீடியோ, கேமரா எல்லாம் இருந்திருந்தால், 15 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழக முதல்வர் ஆகியிருப்பேன்...' என, சரத்குமார் கூறுகிறாரே...

கண்டிப்பாக... ஏதாவது சினிமாவில் முதல்வர் வேடம் கிடைத்திருக்கும்!

* ம. வசந்தி, திண்டிவனம்: காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே, சுயமாக, சுதந்திரமாக முடிவெடுக்க முடியுமா?

நமது ஜனாதிபதி போலவே, இவரும், 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆகவே இருப்பார்... நேரு குடும்பத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டே நடப்பார்!

ரா. ராஜ்மோகன், விழுப்புரம்:'தினமலர்' நாளிதழ் துவக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

சுதந்திரம் பெற்ற பிறகு, குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்தது... அதை தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என, போராட்டம் நடந்தது... அதை ஆதரிக்கவே, திருவனந்தபுரத்திலேயே, 'தினமலர்' நாளிதழ் தொடங்கினார், நிறுவனர், டி.வி.ஆர்.,

ஆர். ஜெயபாரதி, சாத்துார்: பீகார் முதல்வர், நிதிஷ்குமார், தேசிய அரசியலில் இறங்க போகிறாராமே... கரை சேருவாரா?

ஏன் இப்படி தமாஷ் கேள்விகள் எல்லாம் கேட்கிறீர்கள்... அவர், கரை ஓரம் நிற்பதற்கு கூட இடம் கிடைக்காது!

* எம். முத்து, திருச்சி: 'தர்மம் தலை காக்கும்' என்கின்றனரே... அது சரி... ஆனால், உடலை எது காக்கும்?

நம் நாக்கு தான், உடல் காக்கும்... அசந்தால், அது தின்று கெடுக்கும்!

ஆர். பத்மப்ரியா, திருச்சி: உங்கள் குருநாதர், லேனா தமிழ்வாணனிடம் நீங்கள் கற்ற பாடங்கள் என்னென்ன?

'உனக்கு வரும் கேள்விகளுக்கு நீயே பதில் சொல்ல வேண்டும்...' என்று, அவர் கூறிய பாடத்தைத் தான் கற்றுக் கொண்டேன்!

நெல்லை குரலோன், பொட்டல்புதுார்: திருமாவளவன், தேசிய அரசியலுக்கு தாவுகிறாரா?

அதற்கு அவர் முயற்சிப்பது தெரிகிறது... ஆனால், அவருக்கு தான் ஹிந்தி தெரியாதே... ஹிந்தி எதிர்ப்பாளரும் ஆச்சே... எப்படி தேசிய அரசியலுக்கு செல்ல முடியும்?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us