தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஓ.என். ராமநாதன், மதுரை: பழ.நெடுமாறன் இப்போது என்ன செய்கிறார்?

இலங்கை, விடுதலை புலிகள் தலைவர், பிரபாகரன் எப்போது தமிழகம் வருவார் என, காத்துக் கொண்டிருக்கிறார். பிரபாகரன் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. நெடுமாறனுக்கு வயதாகி விட்டதால், மறதி நோய் வந்து விட்டதோ என, நினைக்கிறேன்!

ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்: மது அருந்தும் பழக்கம் உள்ள என் நண்பன், என்னை ஒருமுறை கூட, மது அருந்த வற்புறுத்தியதே இல்லை. அவனைப் பற்றி...

லென்ஸ் மாமா போல மிகவும் நல்லவர், உங்கள் நண்பர். மாமாவும் ஒரு நாளும் என்னை வற்புறுத்தியதே இல்லை!

* எம். லதா, சென்னை: நம் நாட்டின், 30 முதல்வர்களில், 29 பேர் கோடீஸ்வரர் என்கின்றனரே...

ரயில் டிக்கெட் கூட வாங்க பணம் இல்லாமல், 'வித் அவுட்'டில் சென்னை வந்தவர், கருணாநிதி. அரசியலில் சேர்ந்து முதல்வர் ஆன பின், அவர் சேர்த்த, கோடிகள் எவ்வளவு... இன்று, அவர் குடும்பத்தினரும் கோடீஸ்வரர்கள் ஆகி விட்டனரே... அதேபோல் தான் மற்ற,29 முதல்வர்களும்!

அ. செல்வி, கும்பகோணம்:அறம் செய்ய வேண்டும் என்கின்றனரே...

உண்மை தான்... அறச் செயல்களால் வருவது மட்டுமே இன்பம். அதற்கு மாறான வழிகளில் வருபவை, இன்பம் போல் தோன்றினாலும், துன்பம் ஆகும்!

க. குமார், பொள்ளாச்சி: எனக்கு வயது: 20. என் தாய் என்னைக் கண்டு எப்போது இன்புறுவாள்?

தன் மகன், கல்வி, கேள்வி, ஒழுக்கம், வீரம் ஆகியவற்றால் உயர்ந்தவன் என்று, சொந்தங்கள் மத்தியில் பாராட்டப்படுவதைக் கேட்கும் தாய், அவனை பெற்ற பொழுதில் கொண்ட மகிழ்ச்சியை விட, பெரிதும் இன்புறுவாள்!

ஆர். பாலாஜி, திருச்சி: எனக்கு வயது, 50; இரண்டு மகன்கள். என்னிடம் சொத்து எதுவும் இல்லை. ஆனால், உழைப்பும், நேர்மையும் இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு, எதை கொடுப்பது?

சொத்து இல்லை என்றால் என்ன... உங்களது சந்ததியினருக்கு, நீங்கள் விட்டுச் செல்ல வேண்டிய சொத்துக்கள், உங்களிடம் உள்ள உழைப்பும், நேர்மையும் தான்!

எம். ஜோசப், நெல்லை:மகிழ்ச்சி... அது, என்னிடம் இல்லையே...

மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சி, என்ன தெரியுமா? அது, அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்ப்பது தான்!

என். சங்கர், மதுரை: நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேனே... உங்கள், 'அட்வைஸ்' என்ன?

'வெரி குட்...' நேர்மைக்கு எந்நாளும் பலன் உண்டு. ஆனால், அதை அடைய நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். கிடைக்கும் பலன், நிலையான பலனாக இருக்கும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us