தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மா. தருண் ராஜா, தென்காசி: துப்பாக்கி, 'லைசென்சை' புதுப்பித்து விட்டீர்களா?

ஏன் இந்த சந்தேகம். டிசம்பர், 2026 கடைசி வரை புதுப்பித்து கொடுத்து விட்டனர்!



மு. கசாலி பீவி, துாத்துக்குடி:ம.தி.மு.க.,வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?


தனியே நின்றால், '0' தான் கிடைக்கும். தி.மு.க.,வுடன் கட்சியை இணைப்பதாலேயே ஏதாவது ஒன்று, இரண்டு இடங்களில் ஜெயிக்க முடியும்!

மு. நாகூர், சாத்தக்கோன் வலசை, ராமநாதபுரம்: பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும், மே.வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின் முயற்சி வெற்றி பெறுமா?

எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும், பிரதமராக வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி இருக்கும்போது, எப்படி ஓரணியில் இணைவர்?



எம். கல்பலதா, சென்னை: தி.மு.க.,வில் இணையுமா, ம.தி.மு.க.,?


இணையாது என்று சொல்லி விட்டார், அக்கட்சியின் தலைவர். ஆனால், அவரின் கட்சியினர் போட்டியிட்டது, உதயசூரியன் சின்னத்தில் தான். அவர்களது கட்சியின் சின்னமான பம்பரத்தையே மறந்து விட்டனர், தொண்டர்கள்.

எனவே, துரை வைகோ அவர்களே, தி.மு.க.,வில் உங்கள் கட்சியை இணைத்து விட்டால், நீங்கள் எம்.எல்.ஏ., ஆகவோ, எம்.பி., ஆகவோ நீண்ட காலம் வலம் வரலாம்!

மு. சம்சுதீன் புஹாரி, துாத்துக்குடி: இந்த ஆண்டும், தி.மு.க., அரசால், 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியவில்லையே...

அவர்களால், இனி ஒரு ஆண்டும் ரத்து செய்ய முடியாது. ரத்து என்பது அவர்களின் போலி தேர்தல் வாக்குறுதி என்பதே உண்மை!

* மா. நாகமுத்து, கோவை: என் நண்பன், சுய தொழில் செய்து வருகிறான். இருந்தாலும், அவன் அழிவதாகத் தோன்றுகிறதே...

தன் வலிமை அறியாமல், தன்னை பெரியவனாக எண்ணி, மற்றவருடன் ஒத்து நடக்காமல் செயல்படுபவர்கள், விரைவில் அழிவர். இதை உங்கள் நண்பரிடம் சொல்லி, திருத்துங்கள்!

* எஸ். குமார், நெல்லை: 'பொற்கால ஆட்சி' என்கின்றனரே, அப்படி என்றால் என்ன?

நாட்டில் நடக்கும் சமூகக் குற்றங்களையும், மாபெரும் ஊழல்களையும், திறமையாக, 'சயின்டிபிக்' முறையில், மூடி மறைக்க முடிந்தால், அதுவே, 'பொற்கால ஆட்சி!'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us