PUBLISHED ON : ஆக 14, 2011

*எஸ்.சீனிவாசன், சிதம்பரம்: தேவைக்கு மேல் என்னிடம் பணம் - சொத்து உள்ளது; ஆனால், மனதில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே உள்ளதே...
பணம் படைத்த பலருக்கும் உள்ள வியாதி இது... கையில் உள்ள பணத்தை எப்படி, எங்கு, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று தெரியாததாலேயே இக்குறை இருக்கிறது!
***
**என்.பழனிசாமி, பல்லடம்: விலைவாசி ஏற்றத்தை பார்த் தால், இனி, ஏழைகள், அரிசி சோறு மறந்து, கூழ் தான் குடிக்க வேண்டும் போலுள்ளதே...
ரொம்ப நல்லது தான்... சுத்தமாக்கி, தவிடு நீக்கி, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் என்ன சத்து இருக்கிறது? விலை ஏற்றம் காரணமாகவாவது கம்பு, கேழ் வரகு கூழ் குடிக்கட்டும்... உடம்புக்கு தேவையான சத்துக் கள், குறைந்த விலையில் கிடைக் கும்; ஆரோக்கியமாக வாழலாம்!
***
*கே.நமசிவாயம், பண்ருட்டி: 'மீசையை குறைத்துக் கொண் டால், நன்றாக இருக்கும்... தாடியை, 'டிரிம்' செய்தால் அழகாக இருக்கும்... எக்ஸ் ட்ரா... எக்ஸ்ட்ரா...' என, ஆண்களிடம், ஒரு சில பெண் கள் தைரியமாக கூறுகின்றனரே...
இதெல்லாம், 'உன் மீது எனக்கு லைக்கிங் இருக்கிறது...' என்பதை, பெண்கள் நாசூக்காக சொல்லும் விதமாம்... (பெண் உ.ஆ., ஒருவரிடம் விசாரித்து எழுதிய பதில் இது!)
***
* ஜி.சொர்ணா, குறிஞ்சிப்பாடி: கஜானா காலியாவதற்குரிய காரணங்கள் என்ன?
'வந்த மாட்டை கட்டுபவர் இல்லை... போன மாட்டை தேடுபவர் இல்லை!' என, கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அது போல, ஆட்சியாளர்களுக்கு நாட்டின் மீது, மக்களின் மீது, அக்கறை இல்லை. தாம், தம்மை சார்ந்தவர்கள் முன்னேற் றத்துக்கு, தம்மிடம் எப்போதும் ஆட்சி பொறுப்பு இருக்க வேண்டும் என்பதிலேயே கடமையாக இருப்பதால், இந்த இழி நிலை. காமராஜர் ஆட்சி காலத்தில், மக்கள் மீது சுமத்தப்பட்ட வரிச்சுமை வெறும், 75 கோடி; இன்றோ பல மடங்கு அதிகம்!
***
*க.கி÷ஷார்குமார், தேவ னூர் புதூர்: இதுவரை தாராள மாக செலவு செய்து வந்த நான், உங்கள் ஆலோசனைகளைப் படித்து, சிக்கனமாக இருக் கிறேன். உடன் இருப்பவர்கள் என்னை, 'கஞ்சன்' என அழைக்க ஆரம்பித்துள்ளனரே...
உடன் இருப்பவர் முன், படாடோபம் காட்ட நினைத்து செலவழித்தால், கையில் காசு இல்லாத போது, இவர்கள் யாரும் உதவப் போவதில்லை. 'கஞ்சன்' என்ற பட்டத்தை கவுரவமாக நினையுங்கள்!
***
*எச்.அன்வர்அலி, திருக் கனூர்: அந்துமணிக்கு சமையல் செய்ய தெரியுமா? எந்த சமையலை சுவையாக செய் வீர்கள்?
சைவம் சூப்பராக வரும்... 'உள்ளி தீயல்' ரெசிப்பி வேணுமா... கடிதம் எழுதுங்கள்!
***
** பி.ராஜாராம், திருப்பூர்: பூ, பழம், காய்கறிகள் அதனதன் சீசன் நேரங்களில், விலை இல்லாமல் சீரழிகின்றனவே... இதனால், நஷ்டமடையும் விவசாயிகளை காப்பாற்ற முடியாதா?
முடியும்... அதற்கு நிறைய செலவாகும். பணம் படைத்த பெரிய நிறுவனங்கள் நினைத்தால், விவசாயிகளை காப்பாற்ற முடியும். சமீப காலங்களில் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதற்கு வழி வகுத்துள்ளன. பழ உற்பத்தியில் உலகின், இரண் டாவது இடத்தில் இருக்கிறோம் நாம்! ஆனால், உற்பத்தியில், இரண்டு சதவீதம் மட்டும் ஜூசாகவோ, வேறு வழியிலோ பதப்படுத்த முடிகிறது... பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இதுவே, 75 சதவீதமாக இருக்கிறது.
***
