தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : அக் 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என். ஆசைத்தம்பி, சென்னை: முன்பெல்லாம், நீங்கள் சட்டையை, 'இன்' செய்த படம், பா.கே.ப.,வில் வரும். இப்போது, 'இன்' செய்வதில்லையே... தொப்பை காரணமா?

'குட்' மிகவும் சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள். என்ன தான் யோகா செய்தாலும், தொப்பை அப்படியே இருக்கிறது!

ம. வசந்தி, திண்டிவனம்:'டாஸ்மாக்'கில் அறிமுகமான புதுவித மது பானத்தை, லென்ஸ் மாமா ருசித்து விட்டு என்ன சொன்னார்?

இந்தியாவில் தயாராகும், மதுபான வகைகள் எதையும் தொட மாட்டார், லென்ஸ் மாமா. ஸ்காட்லாந்தில் தயாராகும், 12 ஆண்டுகள் ஊற வைத்த, 'பிளாக் லேபிள்' தான் பிடிக்கும்!

* எஸ். உமா, கன்னியாகுமரி: தவறு செய்த, ஊழல் செய்த அரசு பணியாளர்களை, பணியிடை நீக்கம் செய்வதை விட, பணி நீக்கம் செய்தால் என்ன?

மிகச் சரியாக சொன்னீர்கள். பணி நீக்கம் தான் ஊழல் செய்பவர்களை, அதைச் செய்ய விடாமல் தடுக்கும். அதற்கு ஏற்றபடி, சட்டங்களை மாற்றுவது அரசின் கடமை!

ஆர். ரதீஷ், சென்னை: தி.மு.க., நடத்திய, மகளிர் உரிமை மாநாட்டில் பங்குபெற்றோர், ஹிந்தியிலும் உரை நிகழ்த்தியுள்ளனரே...

அவர்களுக்கு தமிழ் தெரியுமா... அதனால், தமக்கு தெரிந்த மொழியில் பேசியுள்ளனர். தமிழர்களுக்குத் தான் ஹிந்தியை தெரியாத மொழி ஆக்கி விட்டதே, தி.மு.க.,

மோ. கல்பா, சென்னை: 'இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த வேண்டும்...' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே. அது, அந்நாட்டு அதிபர் காது வரை எட்டுமா?

அவரது காதுகளுக்கு எட்டினாலும், இவரது வேண்டுகோளை கேட்டு விடவா போகிறார்?

ஆர்.எஸ். அபிதா, ஈரோடு: தனி ஆவர்த்தனம் செய்ய கிளம்பியுள்ள, அ.தி.மு.க., பழனிசாமி, தேறுவாரா?

கஷ்டம் தான், தென் மாவட்டங்களில் தேவர்கள் அதிகம். அவர்களிடையே பழனிசாமிக்கு ஆதரவே இல்லையே. வட மாவட்டங்களிலும் இதே நிலை தான் நிலவுகிறது!

* எஸ். ஜான்சன், புதுச்சேரி: வாழ்க்கையில் வெற்றிக்கு தேவையான இரண்டு அம்சங்களைக் கூறுங்களேன்...

உங்கள் வார்த்தைகளில் அறிவுத்திறன் வேண்டும். அதேபோல், செயல்பாட்டிலும் அறிவுத்திறன் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us