
*எஸ்.லட்சுமி, முத்தியால்பேட்டை: எனக்கு இரண்டு அன்பு தோழிகள். ஒரு தோழியிடம் நான் பேசினால், மற்றொரு தோழிக்கு பிடிப்பதில்லை. நான் எப்படி நடந்து கொள்வது?
உங்களிடம் கூறிய அந்தரங்க ரகசியங்கள் எதையும், மற்ற தோழியிடம் நீங்கள் கூறி விடுவீர்களோ என்ற பயம் காரணமாக இவ்வாறு நடந்து கொள்ளலாம். அவ்வாறு இல்லை யெனில், 'பொசசிவ்னஸ்' - ஈகோ ஆகிய பிரச்னைகள் காரணமாகவும் இருக்கலாம். இவ்விரண்டையுமே, 'லாஜிக்'கலாக பேசுவதன் மூலம் தீர்த்து வைக்க முடியும்; முயன்று பாருங்கள்!
***
** ஏ.சத்தியா, திருப்பூர்: சினிமா பார்த்து ஒரு பெண் கெட்டுப் போவாள் என்பது உண்மையா?
'கெட்டு போனவள் - கெட்டுப் போவாள்' என்பதை நிர்ணயிப்பதற்கான அளவு கோல் எதுவுமே கிடையாது. ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், மொழிக்கு மொழி இதன் அளவு மாறுபடுகிறது. சினிமா பார்த்து கெட்டுப் போனாள் - புத்தகம் படித்து கெட்டு போனாள் என்பதெல்லாம் நம்ப முடியாத கட்டுக் கதைகள்!
***
* ஜி.சித்தன், காஞ்சிபுரம்: விலைவாசியை யாரால் கட்டுப்படுத்த முடியும்?
எதற்கெடுத்தாலும் லைசன்ஸ், கட்டுப்பாடு, லெவி என்பது தூக்கி எறியப்பட்டு, தொழிலில், வியாபாரத்தில் ஊக்குவிக்க யாரால் முடியுமோ, அவர்களால் விலைவாசி யைக் குறைக்க முடியும்.
***
*ஆர்.ராமலிங்கம், பி.என்.பாளையம்: நான் ஒரு ஆசிரியை. ஒருவரை விரும்பு கிறேன்; அவரும், என்னை விரும்புகிறார். அவர்கள் வீட்டில் சம்மதம். எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு விஷயம் இன்னும் தெரியாது. நான் இவரை காதலித்து, பதிவு திருமணம் செய்தால், என்னை வேலையிலிருந்து நீக்கி விட தலைமையாசிரியர் மற்றும் மானேஜிங் போர்டு உறுப்பினர் ஆகியோருக்கு உரிமை உண்டா?
உங்கள் திருமணத்தை காரணம் காட்டி வேலையில் இருந்து அனுப்ப யாருக்கும் சட்டப்படி உரிமை கிடையாது; ஆனால், பழிவாங்க வேண்டுமென்று நினைத்து விட்டால், வேறு காரணங்கள் காட்டி, தம் தாகத்தை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
***
*எஸ்.ஆனந்த்ராஜ், திருவண்ணாமலை: இந்த சமுதாயத்தில், ஆண்கள் துணையில்லாமல், பெண் கள் வாழ முடியுமா?
எந்த விதத்தில் இக்கேள்வியை கேட்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லை. பணத்தை அடிப் படையாக வைத்து கேட்கப்பட்ட கேள்வி என்றால், ஆண் துணை இல்லாமல் வாழ முடியும்! எனக்குத் தெரிந்து சென்னையில் மட்டு மல்லாது, தமிழகத்தின் பல ஊர்களில் சுய சம்பாத்தியம் மூலம், பெண்கள் பலர் தனியாக வாழ்வதை அறிவேன். அவர்களில் சிலர், 'ஆண் துணை இருப்பது, வாழ்க்கை பூரணத்துவம் அடைய வைக்கும்!' எனக் கூறுவதையும் கேட்டு இருக்கிறேன்.
***
** ஆர்.ராஜாமணி, திருநெல்வேலி: அந்த கடவுளை நம்புங்கள், இந்த கடவுளை நம்புங்கள், ஒருவர் இதே போல், இருபது காப்பி எழுதியதால், அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தது; ஒருவர் அசட்டை செய்து வேலை இழந்தார், வீடு அடமானத்துக்கு போனது. பிறகு, அவர் மீண்டும் எழுதியதால், மீண்டும் வேலை கிடைத்தது, வீடு திரும்ப கிடைத்தது என்று எழுதி, நீங்களும் இது போல், இருபது காப்பி எழுதி பயன் பெறுங்கள் என கடிதம் வருகிறதே...
ஆகா... வேர்க்கடலையோ, சுண்டலையோ பொட்டலம் கட்ட காகிதம் கிடைத்ததே என, இப்படிப்பட்ட கடிதம் வரும் போது சந்தோஷப்படுங்கள்.
***