தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : நவ 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

**ஆ.சரவணக்குமார், மகாராஜபுரம்: புகழ் - யாரை தேடி வரும்?

புத்திசாலிகளை! அது இல்லாதவர்கள் தேடிப் போனாலும் கிடைக்காது; பணத்தால் அதை வளைத்துப் போட்டாலும், நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு இருக்காது.

***

*எஸ்.காளிதாஸ், அவனியாபுரம்: குற்றமே இல்லாத மனிதன் உலகில் உள்ளனரா?

இருக்கவே முடியாது. துளையே இல்லாமல் நாதஸ் வரம் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்கள்... மனி தனாக பிறந்தவன், குற்றமுள்ள வனாகத்தான் இருப்பான். அவற்றை போக்கிக் கொள்ள முயற்சி செய்பவன், பிறந்ததன் நோக்கத்தை அடைய முயல்கிறான். மற்றவன், சாதாரண மானுடனாகவே இருந்து மறைகிறான்!

***

*எம்.சூர்யகுமார், கம்பம்: இன்றைய சமூகத்தில் துணிச்சல் யாருக்கு அதிகம்? ஆண்களுக்கா, பெண்களுக்கா?

இயற்கையிலேயே பெண்ணுக்கு துணிவு அதிகம். அதனாலேயே அவர்களால் பல வேதனைகளையும், வலியையும் தாங்கி, சமாளிக்க முடிகிறது... ஆண் வெளிகாட் டும் துணிவை, பெண்ணாலும் வெளிகாட்ட முடியும்; ஆனால், இந்த சமூகம் அவர்களை தட்டி வைத்துள்ளது.

***

*சு.திருநாவுக்கரசு, தி.நகர்: உடல் பருமனையும், தொப்பையையும் குறைக்க பல மருத்துவ கம்பெனிகள் விளம்பரம் கொடுக்கின்றனவே... வாங்கி சாப்பிட்டு பார்க்கலாமா?

சேர்த்து வைத்துள்ள காசை ஏன் கரியாக்க எண்ணுகிறீர்கள்? சோம்பலை மூட்டைக் கட்டி வைத்து விட்டு, வீட்டின் கூடத்தில், இருநூறு முறை தினமும் குதியுங்கள் - அதுதான், 'ஸ்கிப் பிங்' ஆடுங்கள்... தொப்பை, கிப்பை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.

***

*ஜெ.கதிரேசன், புவனகிரி: உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம் தானே...

இல்லை... ஆங்கிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது... ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகில், அதிக மக்களால் பேசப்படுவது மாண்டரின் என்ற சீன மொழி. நான்காவது, ஐந்தாவது இடங்களில் முறையே ஸ்பானிஷ் மற்றும் பெங்காலி மொழிகள் வருகின்றன.

***

*எஸ்.சடையப்பன், ஊஞ்சவேலாம்பட்டி: சில அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தி லேயே மது அருந்துவராமே... உண்மையா?

அங்குள்ள கழிவறைகளில் மினி மற்றும் குவார்ட்டர் பாட்டில்களை சஜகமாக காணலாம்... இதுவாவது பரவாயில்லை.... சில அலுவலக கழிவறைகளில், 'காண்டம்'களும் ஆங்காங்கே கிடக்கின்றன என்றால், இவ்வலுவலகங்களின் லட்சணம் எப்படி என்று பார்த்துக் கொள்ளுங்கள்!

***

**ரா.முத்துக்குமார், ஒத்தக்கடை: பெண் போலீ சாரின் பணியிலாவது லஞ்சம் மற்றும் அடாவடித் தனம் இல்லாமல் இருக்கிறதா?

மிக மேல் மட்டத்தில் இல்லை. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கள், ஆண் போலீசுக்கு இணையாக அவர்களை விட ஒரு படி மேலே இருக்கின்றனர்... பெண்களைப் பற்றிய என் உயர்வான கணிப்பில் பொய்த்து போனதில் இதுவும் ஒன்று.

***

*வி.சதாசிவன், திருத்தங்கல்: எவருடைய நட்பை பெற்றால், நல்ல நிலையை அடைய முடியும்?

தானம் கொடுக்கும் மனம் கொண்டவர்கள், அகிம்சாவாதிகள், நன்கு படித்த அறிஞர்களின் நட்பை தேடி பெற்றால், உயர்ந்த நிலையை அடையலாம்.... இக்குணம் கொண்டோர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us