தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : டிச 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** வி.சிவசங்கரன், கோவிலம் பாக்கம்: வாழ்க்கை நம் வசதியால் அமைவதா, பண்பால் வருவதா?

எவ்வளவோ பண வசதி இருந்தும், கோமாளித்தனமாக தானே வாழ்வை பலர் அமைத்துக் கொண்டுள்ளனர். மன நிம்மதி இல்லாமல் அல்லல்படுகின்றனர். பணவசதி இல்லாவிடினும், பண்பு என்ற சிறந்த குணம் இருப்பின், வாழ்க்கை தரம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.

***

*எஸ்.மேனகா, வில்லாபுரம்: இந்த உலகில் எவரால் வாழ முடியாது?

இரக்கம் உள்ளவர்களால்! அளவுக்கு மீறிய இரக்கம் கொண்டவர்களை, இந்த உலகம் ஏமாற்றி விடும்... அவர்களை வாழ விடாது!

***

** சி.தெய்வானை, பசுமலை: எனக்கு மன அமைதியே இல்லை; எப்போதும் சஞ்சலத்தில் உள்ளது மனம்...

மனம் அமைதியற்று போவதற்கு தலையாய காரணம், முன் யோசனை இன்றி போவது தான்... இந்த மரத்தை எங்கே வெட்டினால், இங்கே விழும் என்று தெரிந்து கொள்ளாமல், நுனி மரத்தில் அமர்ந்து, அடி மரத்தை வெட்டுவது போன்ற செயல்களால் மன அமைதி தொலைந்து போகும்!

***

*ம.ஜோதி, திருநின்றவூர்: என்ன தான் பட்ஜெட் போட் டாலும், செலவை கட்டுப் படுத்த முடியவில்லை என்னால். கடன் தான் வாங்க வேண்டி உள்ளது!

பர்ஸ், பஞ்சர் ஆகாமல் இருக்க ஒரே வழி - போலி கவுரவங் களை மூட்டை கட்டி வைப்பது தான்! கடன் - கல்லறையில் தள்ளி விடும்!

***

*ஏ.நாராயணமூர்த்தி, திருக்கனூர்: எந்த செயலிலும் எனக்கு தோல்வியே ஏற்படு கிறதே... என் தலையெழுத்து இது தானோ?

தலை எழுத்து, கால் எழுத்து என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றி கொள்ள நாமே வகுத்துக் கொண்ட போலி கோட்பாடுகள். யாரிடத்தில் பயமும், தயக்கமும் நிறைந்து உள்ளதோ, அவனை துரத்திக் கொண்டே இருக்கும் தோல்வி. மேற்சொன்ன இரண்டையும் ஒழித்துக் கட்டுங்கள்... பின்னர் பாருங்கள்!

***

** ஆர்.யோகராஜன், பூந்தோட்டம்: மனிதன், நிதானம் தவறுவது எப்போது?

உணர்வுகளின் ஆதிக்கத்துக்கு தன்னை பலி கொடுக்கும் போது! அந்தந்த நேரத்தில் உணர்வு களுக்கு உடனடியாக ஒரு, 'ஹோல்ட்-ஆன்' போட்டு, புத்தியை தீட்டினால் தவறாது நிதானம்!

***

*பி.சேதுராம், சிவகாசி: மனிதனின் அவசிய தேவைகள் என்ன?

உள்ளத்தில் தூய்மை, உடம் பில் உடை, கையில் காசு!

***

*வி.வேலுச்சாமி, சிட்ல பாக்கம்: வாழ்வில் வெற்றி பெற படிப்பறிவு தேவையா, அனு பவம் போதுமா?

முதலாவது ஓரளவு உதவும். இரண்டாவது ரொம்ப, ரொம்ப முக்கியம். ஏற்கனவே வெற்றி பெற்றவர்களிடமிருந்து அனுபவ அறிவை பெற்றுக் கொள்வது லாபகரமானது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us