தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜன 22, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*என்.தினகரன், அரண்மனை பேட்டை: மேலை நாடுகளிலும், இங்குள்ளது போன்ற, 'டிவி' பைத்தியங்கள் உண்டா?

உண்டு... ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல், நம்மை போன்றே ஒரு விவசாய நாடு. அந்நாட்டின் மக்கள் தொகையில், 88 சதவீதம் பேர், 'டிவி' முன்தான் வாழ்க்கை நடத்துகின்றனராம். இதனால், ஐரோப்பாவிலேயே, சோம்பேறிகள் மிகுந்த நாடு, போர்ச்சுக்கல் என பெயரெடுத் துள்ளது. நாம் அவ்வளவு மோசமாக இல்லை என்பது ஆறுதல் அளிக் கிறது!

***

** பா.தனபால், பொன்னமராவதி: ஒருவனுக்கு நன்மையும், தீமையும் எப்படி நடக்கின்றன?

எவருடைய பேச்சில், நல் வார்த்தைகளும், சத்தியமும் இருக் கிறதோ, அவர்களுக்கு நன்மையே நடக்கும்! நன்மையும், தீமையும், ஒருவனுடைய நாவினால் நடப் பவை தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

***

*கி.ஜெய்சங்கர், விருகம் பாக்கம்: வார இதழ்களின் அட்டையில், அவை வெளியாகும் தேதியை குறிப்பிடாமல், அடுத்த வார தேதியை குறிப்பிடுகின்றனரே... ஏன்?

நியூஸ் ஸ்டாண்ட் சேல் - கடை விற்பனையை மனதில் கொண்டே இவ்வாறு செய்கின்றனர். வெள்ளிக்கிழமை, ஒரு இதழ் வெளியாகிறது என்றால், அடுத்த வியாழன் வரை, கடைகளில் தொங்கு மல்லவா? அவற்றை செவ்வாயோ, புதனோ, வியாழனோ வாங்கு பவர்கள், பழைய இதழ் என நினைத்து வாங்காமல் போய் விடக் கூடாதே... அதனால் தான் இந்த உத்தி!

***

*எஸ்.கோகிலா, ராமநாதபுரம்: பச்சோந்திக்கும், மனித மனதிற்கும் ஒற்றுமை உண்டு என்பது உண்மையா?

உண்மைதான்... தன்னைச் சுற்றி உள்ள நிறத்திற்கு ஏற்றபடி, தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது பச்சோந்தி! தான் பழகும் இடத்திற்கு ஒத்துப் போவது போல், குணத்தை மாற்றிக் கொள்கிறது மனித மனம்!

***

*என்.ஜெயகுமார், பரமக்குடி: கடலின் ஆழம் எவ்வளவு அடி இருக்கும்? உலகிலேயே ஆழமான கடல் எது?

பசிபிக் மகா சமுத்திரம் தான் உலகிலேயே ஆழமான சமுத்திரம். இதன் ஆழம், சராசரியாக, 14 ஆயிரம் அடி! இரண்டாவது இடத்தை பிடிப்பது, நம் இந்து மகா சமுத்திரம்! இதன் சராசரி ஆழம், 13 ஆயிரம் அடி!

***

** கே.காளைராஜன், பம்மல்: படித்த பெண்களை விட, படிக்காத பெண்களை மணமுடித்துக் கொண்டால், நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாம் என்கின்றனரே... உங்கள் பதில் என்ன?

முற்றிலும் தவறான கருத்து இது! இரு தரப்பிலும், 'பைட்டர் காக்ஸ்' இருக்கத்தான் செய்கின்றன. 'லகான் பிடித்திருப்பவனை பொறுத்து, நடந்து கொள்ளும் குதிரை!' என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அன்பான, ஆதர வான மனைவியை புரிந்து நடக்கும் கணவனுக்கு, படித்த பெண் - படிக்காத பெண் - இருவருக்குமே வேறுபாடு இருக்காது!

***

*அ.சிதம்பரம், அசோக் நகர்: பேசியே காரியம் சாதிப்பவர்களையும், அடுத்தவர்களை ஏவியே, காரியம் சாதிப்பவர்களையும் எப்படி அழைப்பது?

'கெட்டிக்காரன்...' 'சிறந்த நிர்வாகி...' கடுமையான போட்டி நிலவும் இந்த உலகில், 'பிழைக்கத் தெரிந்தவன்...' என அழைக்கலாம். நீங்கள் குறிப்பிடும், 'குவாலிட் டீசை' வளர்த்துக் கொண்டவன், என்றும் சோடை போக மாட்டான்.

***

* எஸ்.சோமசுந்தரம், திருப்பத்தூர்: தோல்வி களை தோற்கடித்து, வாழ்க்கையில் வெற்றிகளை மட்டுமே பெற என்ன செய்ய வேண்டும்?

இது பேராசை... வாழ்வில் தோல்வியே சந்திக்காத ஒரு வரை சுட்டிக் காட்டுங்கள் பார்ப்போம். தோல்வியும், வெற்றியும் இணைந்தது தான் வாழ்க்கை! வெற்றியே பெற்று கொண்டிருப்பதாக கற்பனை செய்து பார்த்தாலே, 'போர்' அடிக்கிறது; 'த்ரில்'லே இருக்காது போல் தோன்றுகிறது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us