sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 19, 2013

Google News

PUBLISHED ON : மே 19, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, 'பென்ஸ்' மோட்டார் தொழிற்சாலையில், 'பிட்டர்' ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.

பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன.

அது: தம்பி... இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது... ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, 'டாட்டா' கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது... நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!

இதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்... இங்கே லேபர், 'சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, 'அட்வான்டேஜ்' ஆகிப் போகிறது.

இந்தியாவில் லேபர் எவ்வளவு, 'சீப்' என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி...' என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்... இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்... ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்... ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்...

இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க!

கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்... ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,' என்றார் அந்த நண்பர்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசியம்.

***

இந்திய அரசியலில் நேர்மையானவர்கள் என்று பேரெடுத்த ஒன்றிரண்டு தலைவர்களில் மது தண்டவதேயும் ஒருவர். இவருடைய கட்டுரை ஒன்றில் இருந்த ”வாரசியமான பகுதி...

ஆண்டு 1947. ஆகஸ்ட் மாதம். இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் நாளில் காந்தியும் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற வேண்டும் என்று ஆசைப்பட்டனர் நேருவும், படேலும். அப்போது மதக் கலவரங்களால் வட மாநிலங்கள் அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்த நேரம். அதிலும் வங்காளத்தில் நிலைமை படுமோசம். அதனால், கொல்கத்தாவில் இருந்தார் காந்தி.

காந்தியை டில்லிக்கு வரச் சொல்லி நேருவும், படேலும் ஆள் அனுப்பினர். நடுநிசியில் வந்து சேர்ந்த அந்த ஆளிடம், 'சாப்பிட்டீர்களா?' என்று கேட்டார் காந்தி. வந்தவர், 'இல்லை!' என்று சொல்லவே, அவருக்கு முதலில் உணவளித்தார் காந்தி.

இந்தியாவின் முதல் சுதந்திர தின விழாவுக்கு நேருவும், படேலும் அழைத்தது பற்றி காந்தியிடம் சொன்னார் வந்தவர். அவருக்கு காந்தி சொன்ன பதில் இது:

என்ன முட்டாள் தனம் இது! இங்கே வங்காளத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி செத்துக் கொண்டிருக்கின்றனர். கல்கத்தா இப்படி இருளில் மூழ்கிக் கிடக்கிற போது, டில்லி நகரின் பளபளப்பு வெளிச்சத்தில் நான் எப்படி விழா கொண்டாட வர முடியும்?'

இதைச் சொல்லியதோடு நிறுத்தவில்லை காந்தி. 'இங்கே வங்காளத்தில் அமைதி திரும்பும் வரை நான் எங்கேயும் வர முடியாது. இந்த மக்களின் அமைதியான வாழ்வுக்காக நான், என் உயிரையும் கொடுப்பேன்' என்று சொல்லி, டில்லி வர மறுத்து விட்டார்.

வந்த ஆள் காலையில் டில்லி கிளம்பினார். அவரை அனுப்பி வைப்பதற்காக, கொஞ்ச தூரம் உடன் வந்தார் காந்தி. அப்போது அங்கிருந்த மரத்திலிருந்து ஒரு உலர்ந்த இலை கீழே விழுந்தது. குனிந்து அதை எடுத்து, நேருவின் நண்பரிடம் கொடுத்து, சொன்னார் காந்தி:

நண்பரே... நான் அதிகாரமோ, பண பலமோ இல்லாதவன். நேருவுக்கும், படேலுக்கும் இந்த நாளில் பரிசாகக் கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது. இந்த உலர்ந்த இலையை முதல் சுதந்திர தின விழாவுக்கு என் பரிசாக நேருவிடமும், படேலிடமும் கொடுங்கள்...

அதை வாங்கியபோது, அந்த நண்பர் அழ ஆரம்பித்து விட்டார். அப்போது காந்தி சொன்னார்:

நண்பரே... கடவுளின் கருணையைப் பாருங்கள்; நான், தங்களிடம் உலர்ந்த சருகான இலையைக் கொடுத்தேன். அதை உங்கள் கண்ணீரால் பசுமையாக்கி விட்டார் கடவுள். உங்கள் கண்ணீரால் நனைந்த இந்த இலையை எடுத்துச் செல்லுங்கள், என்றார்.

— இதைப் படித்த போது எனக்குள் பல கேள்விகள் எழுந்தன... சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் மதக் கலவரங்கள் ஓய்ந்த பாடில்லை. இப்போது புதிதாக மத பயங்கரவாதமும், ஜாதிக் கலவரங்களும் முளைத்து விட்டன... ஆனால், அப்போது இருந்ததைப் போன்ற நல்ல தலைவர்கள் தான் இப்போது நம்மிடையே இல்லை!

***

நீங்கள் திருமணமானவரா?

கோபம் வந்தால் உங்கள் மனைவியை, 'நாயே... பேயே... பெருச்சாளியே... எலியே... பூனையே...' எனக் கண்டபடி திட்டுவீர்களா? 'ஆம்' என்றால், இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்...

ஏனென்றால், உங்கள் மனைவி இதற்காக நீதிமன்றம் போனால், மூன்று வருடம் கடுங்காவல் தண்டனை உண்டாம்.

ஐ.பி.சி., 498(ஏ) பிரிவின்படி இந்த தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்காம்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், ஒரு அன்பர், தன் மனைவியை, 'போடி பழுதாரே...' (பழுதாரே என மலையாளத்தில் சொன்னால், 'பூரான்' எனப் பொருளாம்!) எனத்திட்டி இருக்கிறார்.

உடனே, அன்பரின் தர்மபத்தினி நீதிமன்றம் சென்றுவிட்டார். இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை.

எனவே, கணவன்மாரே... ஜாக்கிரதை.

ஒரு இதழில் படித்த இந்த சேதியை லென்ஸ் மாமாவிடம் கூறினேன்.

'அப்போ, வழக்கமா நான் தானே மாமி கிட்டே இருந்து இப்படிப்பட்ட அர்ச்சனை எல்லாம் வாங்கறேன்... என் நிலை என்ன?' எனப் பரிதாபமாகக் கேட்டார்.

'கெட்டிக்கார வழக்கறிஞர் யாரையாவது அணுகுங்கள்...' எனச் சொல்லி நகர்ந்தேன்.

***






      Dinamalar
      Follow us