தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 18, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாலு அடி, எட்டு அங்குலமே உயரம்...

49 வயது... பெயர் பர்பாடி பரூவா... இவர் ஒரு பெண்... பெரிய சாதனையாளர்! 'ஆண்களால் மட்டுமே முடியும்!' என்ற கடினமான வேலையில் — காட்டு யானைகளை பிடித்து அடக்கும் வேலையில் ஈடுபடும் பெண் இவர் தான்... இவர் அŒõம் மாநிலத்தை சேர்ந்தவர்!

பர்பாடி, பள்ளியில் அக்கறையாக படித்ததில்லையாம்... பரீட்சை எழுத தான் ஸ்கூலுக்கு போவார். வருடத்திற்கு ஆறு, எட்டு மாதங்கள் காட்டுக்குள் இருப்பார். அம்மாவின் வற்புறுத்தலால், கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தார். இவரது தந்தை ப்ரக்ரிடீஷ் சந்திர பரூவா, சர்வதேŒ அளவில் யானை பயிற்சியாளர்.

பர்பாடி, ஆயிரத்திற்கு மேல் காட்டு யானைகளை பிடித்திருக்கிறார். அதில், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஜங்பகதூர் என்ற யானையும் அடங்கும்.

முதல் யானையை பர்பாடி பிடித்தபோது, அவருக்கு வயது 15. மிகவும் ஆபத்தான முறையில் அவர் முதல் யானையை பிடித்தார். ஒரு யானையின் மீது உட்கார்ந்து, 20 கிலோ எடையுள்ள சணல் கயிற்றில் ஒரு முடிச்சுப் போட்டு, அதை காட்டிற்குள் இருக்கும் யானைக் கூட்டத்தில், ஒரு யானை மீது வீச வேண்டும்.

ஏற்கனவே, பழக்கப்பட்ட மற்றொரு யானையும், யானைப் பாகனும் சேர்ந்து, முடிச்சை இறுக்கி, யானையை தப்ப விடாமல் செய்து, அந்த யானையை பிடிப்பர்...

யானை பிடிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை... பிடித்த யானையை பழக்க வேண்டும். பிடிபட்ட யானையோடு பல நாட்கள் இரவும், பகலும் பேசி, அதை சமாதானப்படுத்த வேண்டும்.

காட்டு யானைக்கு முதலில் அளிக்கப்படும் பயிற்சி, நான்கு உத்தரவுகளுக்கு கீழ்படிவது தான்.

'நில்... முன்னே போ... பின்னே போ... திரும்பு...'

பழக்கப்பட்ட இரு யானைகளுடன், ஒரு பிடிபட்ட யானையை கயிற்றால் கட்டி, அதை பழக்குவர்.

யானை பிடிக்க காட்டுக்குள் செல்லும்போது, உயிரோடு திரும்பி வருவது உத்திரவாதம் இல்லை. ஒரு முறை, இரு காட்டு பெண் யானைகள், பர்பாடியை தாக்க ஓடி வந்தன... நல்ல வேளை, பழக்கப்பட்ட யானைகள் சில, சமயத்தில் வந்து, பர்பாடியை காப்பாற்றி விட்டன.

நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டி, பர்பாடி பற்றி, 'ஜம்போ ஜம்பூரி' என்ற டாகுமென்ட்ரி படம் எடுத்திருக்கிறது.

அதை அடுத்து, 'யானைகளின் ராணி' என்ற டாகுமென்ட்ரி படம் டிஸ்கவரி, 'டிவி' சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

முன்பு அவர் தந்தையிடம் பல வேலைகளை கொடுத்து வந்த மேற்கு வங்காள அரசு, இப்போது, பர்பாடிக்கு பணி கொடுக்கிறது. டீ தோட்டங்களை நாசமாக்கும் காட்டு யானைகளை விரட்ட, சில டீ எஸ்டேட்கள் பர்பாடியை அணுகுகின்றன...

பெண்கள் நினைத்தால், மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது தெளிவாகிறது அல்லவா!

***

ஏற்காடு எக்ஸ்பிரஸ், சேலத்தை நோக்கி தட, தட வென்ற சப்தத்துடன் சென்று கொண்டிருந்தது... இந்த ரயிலில் மட்டும், இன்னமும் ஓட்டை, உடைசல் பெட்டிகளை ஏன் பயன்படுத்துகின்றனர் எனத் தெரியவில்லை...

அன்று, கூபேயில் நான் மட்டும் தான்... பொட்டலம் கட்டி எடுத்து வந்திருந்த இட்லியை சாப்பிட்டு விட்டு, வாக்@மனை காதில் மாட்டி, மெல்லிய ஒலியில், 'பெடி மாக்குரே'யை பாடச் செய்து, புத்தகக் கட்டை பிரித்தேன்...

காங்கிரஸ்காரரும், சினிமா தயாரிப்பாளரும், பதிப்பாளருமான மறைந்த சின்ன அண்ணாமலை எழுதிய புத்தகம் அது. அதில் ஒரு சுவையான பகுதி —

மீண்டும் ராஜாஜி, 1952ல் முதலமைச்சரான போது, 'இந்து நேசன்' என்ற மஞ்சள் பத்திரிகையும் மற்றும் அது போன்ற பத்திரிகைகளும், கடைக்குக் கடை ஏராளமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன.

ஒருநாள், நான் மேற்படி பத்திரிகைகள் அனைத்தையும் சேகரித்து, முதலமைச்சர் ராஜாஜியின் மேஜை மீது வைத்தேன். 'என்ன இதெல்லாம்?' என்று கேட்டார்.

'தாங்கள் முதலமைச்சராக இருக்கும் ராஜ்ஜியத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கியங்கள்...' என்றேன். உடனே ராஜாஜி, மேலாக இருந்த இந்து நேசன் பத்திரிகையை எடுத்துப் பார்த்தார். அதில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில்,

'அஞ்சலிக்கு அது இருக்கா?' என்று எழுதியிருந்தது.

'அது இருக்கா என்றால் என்ன அர்த்தம்?' என்று குழப்பமாகக் கேட்டார் ராஜாஜி. 'தாங்கள் பெரிய மேதை; உயர்ந்த விஷயங்களையே சிந்திப்பவர். அதனால், இதன் அர்த்தம் உங்களுக்கு சட்டென்று பிடிபடாது. செக்ஸ் சம்பந்தமான மேட்டர்கள். இப்படி நிறைய பத்திரிகைகள் வெளியிடுகின்றன...' என்@றன்.

'ஓ! யெல்லோ மேகசின்...' என்று சொல்லி விட்டு, அப்பத்திரிகைகள் அனைத்தையும் வேறு பக்கம் தூக்கிப் போட்டு விட்டார்; நானும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

'போலீஸ் கமிஷனர் பார்த்தசாரதி ஐயங்கார் டெலிபோனில் பேசினார்; தங்களைப் போனில் பேசச் சொன்னார்கள்...' என்று வீட்டில் உள்ளவர்கள் கூறினர். போலீஸ் கமிஷனருக்குப் போன் செய்தேன்.

'இன்று ராஜாஜியிடம் என்ன ரிப்போர்ட் செய்தாய்?' என்று கேட்டார். விஷயத்தைச்

சொன்னேன். 'சரி, மாலையில் சந்திப்போம்...' என்றார்.

மாலையில் அவரைச் சந்தித்தபோது, முதலமைச்சர் ராஜாஜி அவரை நேரில் வரச் சொன்னாராம். நான் கொண்டு போய் கொடுத்த பத்திரிகைகள் அனைத்தையும், போலீஸ் கமிஷனரிடம் முதலமைச்சர் கொடுத்து, இந்தப் பத்திரிகைகள் இனிமேல் கடைகளில் விற்கவும் கூடாது; அச்சகத்தில் அச்சாகவும் கூடாது; அதற்கு உடனே, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டாராம்.

போலீஸ் கமிஷனர் சிறிது தயக்கத்துடன், எந்தச் சட்டத்தை வைத்து பத்திரிகையைத் தடுத்து நிறுத்த இயலும் என்று கேட்டாராம். அதற்கு ராஜாஜி, 'சமூகத்தின் நன்மைக்காக செய்யப்படுவது தான் சட்டம். சமூகத்தின் நன்மைக்காக நாம் எதைச் செய்தாலும் அது சட்டம் தான். உங்களுக்குள்ள அதிகாரத்தை வைத்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்று கண்டிப்பான உத்தரவு போட்டாராம்.

உடனடியாக, கடைகளில் உள்ள மஞ்சள் பத்திரிகைகள், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இனிமேல் இம்மாதிரி பத்திரிகைகள் விற்றால் கைது செய்வோம் என்று எச்சரிக்கையும் செய்யப்பட்டன.

(இன்று இது போன்ற பத்திரிகைகள் சென்னை தவிர ,அனைத்து ஊர்களிலும் பல வண்ணங்களில் சக்கை போடு போடுகின்றனவே! சட்டம் இப்போது மாறி விட்டதோ என நினைத்துக் கொண்டேன்!)

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us