தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : மார் 18, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*என்.பழனிச்சாமி, சம்மட்டிபுரம்: பெண்கள், 'பொசுக்'கென்று அழுது விடுகின்றனரே... ஏன்?

பெண்களிடம் உறுதியான மனம் இருந்தாலும், இளகிய குணம் இருக்கிறது. அநியாயம், அக்கிரமம், கொடுமை, சுடு சொல் கேட்கும் போதும், பார்க்கும் போதும் இளகி விடுகின்றனர். இதன் வெளிப்பாடே கண்ணீர்! இந்த சூழ்நிலைகளில் இருந்து உடனே மீண்டு, தம்மை, 'கம்போஸ்ட்' ஆக, உட@ன வைத்துக் கொள்ள, அவர்களால் மட்டுமே முடியும்.

***

** எஸ்.வசந்த், பள்ளிச்சேரி: பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை, பின் தங்கிய மாநிலங்களாக ஏன் இன்னும் கருதுகின்றனர்?

படிப்பறிவு இல்லை... பெண்ணுக்கு ஏற்ற திருமண வயது, 21 தான் என்றால் ஏற்பதில்லை. பீகாரில், வயதுக்கு வராத பருவத்தில் உள்ள பெண் குழந்தை களை, நூற்றுக்கு 58ம், ராஜஸ் தானில், 50 என்ற விகிதத்திலும் கல்யாணம் செய்து கொடுக்கின்ற னர் - இம்மாநிலங்கள் பின் தங்கியவை தானே!

***

*பி.பரமசிவம், கள்ளக்குறிச்சி: என் நண்பன் அடிக்கடி தன் மனதை மாற்றிக் கொள்கிறானே...

அவருக்கென, எந்த கொள்கையும் இல்லை என நினைக்கிறேன்! கொள்கை இல்லாதவனுக்கும், குற்றம் செய்தவனுக்கும் அடிக்கடி மனம் மாறிக் கொண்டே இருக்கும்.

***

*வி.ஆறுமுகம், சத்தியமூர்த்தி நகர்: அமெரிக்கர்கள் அறிவாளிகளா?

உலகிலேயே மிகப் பெரிய ஜன நாயக நாடு இந்தியா என்பது, 80 சதவீத அமெரிக்கர்களுக்கு தெரிய வில்லையாம்! அதே போல், கல்லூரி மாணவர்களில், 50 சதவீதம் பேர் வியட்நாம் நாட்டை, தீவு என்கின்றனராம்; இதே பதிலை, 67 சதவீத பள்ளி மாணவர்களும் கூறினராம். அமெரிக்க தேசிய கமிஷன் எடுத்த சர்வேயில் இத்தகவல்கள் உள்ளன.

***

*தே.கார்த்திக் ராஜா, சின்னமனூர்: இந்த காலத்தில், சில மொட்டுகள், மலரும் முன்னரே காதல் பார்வை பார்க்கின்றனரே...

வீட்டின் நடுக் கூடத்தில், மாற்றி மாற்றி, ஒவ்வொரு சேனலிலும் காதல் செய்து கொண்டிருந்தால் சலனப்படாதா மனது? இந்த வயதில் பெற்றோரின் வழி காட்டுதலும், கண்டிப்பும், மிக மிக தேவை!

***

* ஆர்.கணேசன், மாரியப்பா நகர்: அரசியல் கட்சிகள் பெருகியதற்கு என்ன காரணம்?

குறுக்கு வழியில், குறுகிய காலத்தில், பணக்காரனாகும் ஆசையால் தான், கட்சி பிசினஸ் ஆரம்பித்துள்ளனர் பலர். கால ஓட்டத்தில் இவை அழிந்து போகும்.

***

** சி.வேணுகோபால், மந்தைவெளி: பணம் சம்பாதிப்பது, அதை சேர்த்து வைப்பது - இரண்டிலும் சிரமமான காரியம் எது?

இரண்டாவது தெரியாததால் தான், இன்று நம்மில் பலர் அவஸ்தை படுகின்றனர். பணம் சம்பாதிப்பது சுலபம்; அதை சேர்த்து வைக்கும் கலையைக் கற்று கொண்டு விட்டால் நிம்மதி யாக, சந்தோஷமாக வாழலாம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us