PUBLISHED ON : மார் 18, 2012

'பேனா மன்னர்' என்றழைக்கப்படும், டி.எஸ். சொக்கலிங்கம் (அக்காலத்திய தினமணி பத்திரி கையின் ஆசிரியர்) சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைவாசம் அனுபவித்தவர். தன் சிறை வாழ்க்கை பற்றிய கட்டுரையில் எழுதுகிறார்:
திருச்சி சிறைக்குள் என்ன தான் கட்டுப்பாடுகள் இருந்தாலும், வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, சிகரெட்டுகள், மூக்குப்பொடி ஆகியவை, எப்படியாவது வந்து விடும். ராஜீய (விடுதலைப் போராட்ட) கைதிகளில் பலர், இவைகளில் ஏதாவது ஒரு பழக்கத்தைக் கொண்டவர்களாய் இருப்பர்.
அச்சமயம், சிறையில் சூப்பிரன்டெண்ட்டாக, ஒரு பிரிட்டிஷ்காரர் இருந்தார். ரொம்பக் கண்டிப்புள்ளவர். அப் போது ஜெயிலராக இருந்தவர் ஓர் ஆந்திரர். அவர், அதற்கு முன் பல சிறைகளில், ராஜீயக் கைதிகளின் மீது தடியடி நடத்தி, பெயர் வாங்கியவர்.
ஜெயிலரும், சூப்பிரன்டெண்ட் டும் இப்படிப்பட்டவர்களாக இருந் தும், எங்களுக்கு வேண்டிய புகை யிலைச் சரக்குகள் மட்டும், ஒழுங்காய் கிடைத்தன. இந்த விஷயம் சூப்பிரன்டெண்ட் டுக்கு எட்டியது. அவருக்குக் கோபம் வந்து, 'ராஜீயக் கைதிகளின் அறைகளைச் சோதனையிட வேண் டும்...' என்று சொல்லி, ஜெயிலர், உதவி ஜெயிலர், வார்டன்களுடன் கிளம்பி விட்டார்.
சோதனை போட்டால், அநேகமாய் ஒவ்வொருவர் அறையிலும், ஏதாவது ஓர் ஆட்சேபனையான சரக்கு அகப்படத்தான் செய்யும். அப்படி அகப்பட்டால், அதற்காக தனியாகத் தண்டனை வேறு கிடைக்கும்.
என்ன செய்வது என்று நானும், அய்யரும் (மட்டப் பாறை சிங்கம் அய்யர்) யோசனை செய்தோம். முடி வாக, எல்லாரிடமும் இருக்கிற சரக்குகளை, நாங்கள் இரு வரும் வாங்கி வைத்துக் கொள்வதென்று முடிவு செய் தோம். அதே போல சரக்குகள் எல்லாம், எங்கள் அறைகளில் வந்து சேர்ந்தன.
மற்ற வரிசைகளில் சோதனை போட்டு, ஒன்றும் அகப்படாத சிறை அதிகாரிகள், எங்கள் வரிசைக்கு வந்தனர். எங்கள் வரிசையில் அய்யர் அறை, ஒரு கோடியிலும், என்னுடைய அறை, மற்றொரு கோடியிலு<மாக இருந்தன. அய்யர் அறையைச் சோதனை போட்ட போது, சரக்குகள் ஏராளமாய் அகப்பட்டதைப் பார்த்ததும், சூப்பிரன்டெண்ட்டு அப்படியே அசந்து போனார்.
என்ன செய்வதென்று அவருக்குத் தெரிய வில்லை. மற்ற அறைகளில் மேற்கொண்டு சோதனை போடுவதையும் நிறுத்தினார். ராஜீயக் கைதிகளில், முக்கியமானவர்களில் இரண்டொரு வரை அழைத்து, தனியாகப் பேசினார். 'என்னதான் கட்டுப்பாடு இருந்தாலும், புகையிலை, சரக்குகள் எப்படியாவது, சிறைக்குள் வந்து விடும்...' என்றும், 'அவற்றைக் கவனிக்காதது போல இருந்து விடுவது தான் நல்லது...' என்றும், அவர்கள் கூறினர்.
'ராஜீயக் கைதிகளிடம் மோதிக் கொள்வதால், நம்முடைய வேலைத் திறமையைப் பற்றி சர்க்கார் குறை கூறுவார்களோ...' என்ற பயம் அவருக்கு ஏற்பட்டது. அதனால், ஒரு சமரசத்திற்கு வந்தார்.
புகையிலைச் சரக்குகள் வேண்டிய வர்கள், சிறை சப்ளையர் மூலமாக வரவழைத்துக் கொள்ளலாம் என்றும், வார்டன்கள் மூலம் வரவழைக்கக் கூடாதென்றும் சொன்னார். நாங்கள் சந்தோஷமாக ஒப்புக் கொண்டோம். சிறைக்குள் சரக்குகள் வந்து சேர வேண்டுமானால், ரூபாய்க்கு எட் டணா, வார்டன்களுக்குக் கமிஷன் கொடுக்க வேண்டும். சிறை சப்ளையர் மூலம் வரவழைத்தால், ரூபாய்க்கு ரூபாய், சரக்குகள் கிடைத்து விடும். இதில் எங்களுக்கு என்ன ஆட்சே பனை இருக்க முடியும்?
அதன்பின், எல்லாம் சுமூகமாய் நடந்து வந்தது -இவ்வாறு சொக்கலிங்கம் எழுதியுள்ளதைப் பார்த்த போது, இந்தியா சுதந்திரத் திற்கு முன்பே, நம் சிறைச்சாலைகளில் இருந்த தில்லுமுல்லுகளை அறிந்து, 'சே, என்ன உலகம்!' என்று அலுத்துக் கொள்ளத் தான் முடிந்தது.
***
கவர்னர் மாளிகையான ராஜ்பவன், முன், 'கிண்டி லாட்ஜ்' என்ற பெயரில் கில்பர்ட் ரிச்சர்ட்ஸ் என் பவருக்கு சொந்தமாக இருந் தது. அதை, 1817ல் விலைக்கு வாங்கியது சென்னை அரசு. மவுன்ட் ரோடு மாளிகையில், (ராஜாஜி மண்டபம் இருந்த இடம்) வசித்து வந்த கவர்னர், 1825 முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் ஓய்வு பெற, அந்த லாட்ஜுக்கு செல்வதென வழக்கப்படுத்திக் கொண்டார். 1947 வரை இந்த வழக்கம் இருந்து வந்தது. சுதந்திரம் அடைந்த பின், மவுன்ட் ரோடு அரசு எஸ்டேட்டிலிருந்து, கவர்னருடைய இருப் பிடத்தை, கிண்டி லாட்ஜுக்கு மாற்றி விட்டனர். பிறகு அது, 'ராஜ் பவன்' என்ற புதுப்பெயர் பெற்றது.
***
நடுத்தெரு நாராயணன்!
