PUBLISHED ON : டிச 03, 2023

அ நிறம் | அளவு
கேரளாவை காண வரும், வசதியான சுற்றுலா பயணிகளுக்காக, ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது.
கேரளா சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும், இதனால், மக்கள் படும் துன்பமும் அதிகம். கேரளா வருவோர், பயணத்துக்காக அதிக நேரம் வீணடிக்க வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க தான் ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
கொச்சி, சபரிமலை, குருவாயூர், காடாம்புழா கோவில்களுக்கு சென்று வர, ஐந்து பேருக்கு கட்டணமாக, 3.5 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொச்சியிலிருந்து சாலை மார்க்கமாக மூணாறு செல்ல குறைந்தபட்சம், ஏழு மணி நேரமாகும். ஆனால், ஹெலிகாப்டரில், 35 நிமிடங்கள் பயணித்தால் போதும்.
— ஜோல்னாபையன்
