PUBLISHED ON : டிச 03, 2023

படத்தில் உள்ள இரு ராணுவ வீரர்களும், இந்தியர்கள். ஆனால், உக்ரைன் ராணுவத்தில் பணிபுரிபவர்கள். இவர்களையும் சேர்த்து, மொத்தம் மூன்று இந்தியர்கள், உக்ரைன் ராணுவத்தில் உள்ளனர்.
படத்திலுள்ள ஆன்டிரி (இது உக்ரைன் பெயர்) மற்றும் நவீன் என இருவருமே, மாணவர்களாக உக்ரைன் சென்றனர்.
யுத்த ஆரம்பத்தில், 'விரும்பினால் நாடு திரும்பலாம்...' என கூறியபோது, இவர்கள் வரவில்லை.
அங்கேயே இருவரும், உக்ரைன் பெண்களை காதலித்து திருமணம் செய்து தங்கி விட்டனர். ஆன்டிரிக்கு குழந்தைகள் உள்ளனர்.
ஆன்டிரி, மார்ச் 22லும், நவீன், ஜனவரி 23லும் ராணுவத்தில் சேர்ந்தனர். முதலில் பிராந்திய படையில் இணைந்து பயிற்சிகளை பெற்று, முதன்மை ராணுவத்திற்கு மாறி விட்டனர்.
உக்ரைன் - ரஷ்யா எல்லையில், 'கோஸ்டியான்டியினிகா' என்ற இடத்தில் உள்ளனர்.
'துப்பாக்கி சத்தங்களுக்கு குறைவில்லை. இதற்குள் மூன்று - நான்கு முறை உயிர் தப்பி விட்டோம். உக்ரைனுக்காக உயிரை விட தயார்...' என்கின்றனர்.
மத்திய பிரதேசத்துக்காரர், ஆன்டிரி. தென்னிந்திய உணவுகளான, இட்லி, தோசை பிடிக்கும். ஜூனியர் என்.டி.ஆர்., ரசிகர். கேஜிஎப்1 மற்றும் 2 சினிமாவை பார்த்துள்ளாராம்.
கிரிக்கெட் ரசிகர், நவீன். ஐ.பி.எல்., பற்றி பேசுகிறார். இவருக்கு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வம் உள்ளது.
ஜோல்னாபையன்
