தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கட்டுரை - பிரபஞ்சத்தில் விபரீதம் - சி.பி.ராகோத்தமன்

கட்டுரை - பிரபஞ்சத்தில் விபரீதம் - சி.பி.ராகோத்தமன்

கட்டுரை - பிரபஞ்சத்தில் விபரீதம் - சி.பி.ராகோத்தமன்


PUBLISHED ON : ஜூலை 18, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இது, தூசிகளும், சிறியதும்  பெரியதுமான பாறைகளையும் கொண்டது.

இந்த பாறைகளும், தூசிகளும், பூமியைப் போல் சூரியனை வலம் வந்து கொண்டிருக் கின்றன. இவை சில நேரங்களில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக ஈர்க்கப்படுகின்றன. இதனால், அவை  பூமியின் ஈர்ப்பு பாதைக்குள் வந்து, காற்று மண்டலத்தில் நுழைந்து, பூமியை நோக்கி மிக வேகமாக ஊடுருவுகின்றன. அப்போது, காற்றின் உராய்வு காரணமாக தீப்பிடித்து அவை எரிந்து போய் விடுகின்றன. இவை தான்  எரிகற்கள் என அழைக்கப்படுகின்றன.

நாசாவின் சமீபத்திய ஆய்வில்  தூசிகள், பாறைகள் கொண்ட பிரமாண்டமான ஒரு  தூசி மண்டலம் கண்டறியப்பட்டுள்ளது. நாசா அனுப்பியுள்ள ஹம்பிள் விண்வெளி தொலைநோக்கி இதை கண்டுபிடித்துள்ளது.

ஹம்பிள் தொலை நோக்கி மூலம், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில், கடந்த மாதம் இரண்டு சிறிய கோள்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புதியதாக ஒரு தூசு மண்டலம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சூரியனில் இருந்து 18 கோடி மைல் தூரத்திலும், பூமியில் இருந்து ஒன்பது கோடி மைல் தூரத்திலும் இந்த தூசி மண்டலம் காணப்படுகிறது. இதன் பெயர் பி/2010 ஏ2 என்பதாகும்.

ஒரு கட்டடத்தின் இடிந்த பாகங்களை போன்று இந்த தூசி மண்டலம் காட்சி அளிக்கிறது. இந்த தூசி மண்டலம் ஒரு ஓடைபோல் வேகமாக நகர்ந்து வருகிறது. மணிக்கு  11 ஆயிரம் மைல் தூரம் கடக்கிறது. இது, ஒரு துப்பாக்கியில் இருந்து செல்லும் புல்லட்டின் வேகத்தை விட, ஐந்து மடங்கு அதிகம். வால்நட்சத்திரத்தின் முக்கிய பாதை போன்று, இந்த தூசி மண்டலம் அமைந்துள்ளது அபூர்வமானது என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஜனவரி இறுதியில் இந்த தூசி மண்டலத்தின் மையப் புள்ளியை தொடர்ந்து ஆய்வு செய்தபோது, இதன் தோற்றம் வழக்கமாக காணப்படும் சிறிய கோள்களை போன்று இல்லாமல் வேறுபட்டு இருப்பது கண்டறியப்பட்டது. பிரபஞ்ச வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தை தொலைநோக்கி மூலம் காணும் போது, அது இழை போன்று நீண்டு, எக்ஸ் வடிவில் காட்சியளிக்கிறது.

இந்த தூசி மண்டலத்தை நிறமாலை பகுப்பு முறையில் ஆய்வு செய்ததில், இது, "புளோரா' கோள் குடும்பத்தை சேர்ந்தது என்றும், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதலில் உடைந்ததால் பி/2010 ஏ2  தூசி மண்டலம் தோன்றியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு வந்த ஒரு பொருள் மோதி தான் பூமியில் இருந்த டைனோசர்கள் அழிந்தன. ஆனால், அதுபோன்ற மோதல்கள் தற்போது ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.                                    ***



14.  கட்டுரை - திருமணத்திற்கு முன் கேட்க வேண்டிய கேள்விகள்  ?  - பத்மலோசனி ஹரிஹரன்



திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது, ஆனால், உண்மையில் நடப்பதென்ன? எல்லா திருமணங்களும் வெற்றிகரமானதாக இருக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் இல்லை என்றே இப்போது பெரும்பாலானோர் சொல்கின்றனர். கோர்ட்களில் இப்போது உள்ள வழக்குகளில், மிக அதிக வழக்குகள் விவாகரத்து வழக்குகள்தான்.

காதல் திருமணம் செய்தவர்களும் சரி... பெற்றோர் பார்த்து, பேசி முடித்து, நடத்தி வைத்த திருமணங்களும் சரி... பெரும்பாலானவை கோர்ட்களில் போய் நின்று விடுகின்றன. இதற்கு காரணம், தம்பதியினரிடையே சரியான புரிதல் இல்லாததுதான். திருமணம் முடிந்த உடனேயே ஒருவருக்கொருவர் ஈகோ பிரச்னை, பணப் பிரச்னை, உடல் நல பிரச்னை என, பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுதல் தான்.

திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரும், மனம் விட்டு பேசினால் மட்டும் போதாது.  உண்மையான பிரச்னை என்ன என்று அப்போது தெரியாது. கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டு , பதிலை பெற்ற பின் முடிவு செய்தால் போதும். பின்னர், திருமண வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராது என்கின்றனர் நிபுணர்கள்.

இதோ அந்த கேள்விகள்:

1. உங்களை கை பிடிக்கப் போகிறவரின் மொத்த வருமானம் எவ்வளவு?

2. தனிப்பட்ட முறையில் ஏதாவது கடனை திருப்பி செலுத்தி வருகிறாரா?

3. வீட்டுக்கடனுக்கான தவணையில் இன்னும் எத்தனை தவணைகள் திருப்பி செலுத்த வேண்டும்?

4. திருமணத்திற்குப் பின்பும் இருவரும் தனித்தனி பாங்க் கணக்கு வைத்திருந்தால் தப்பில்லையே?

5. இதுவரை எத்தனை முறை வேலையை மாற்றியிருக்கிறீர்கள்? அதற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?

6. வெளிநாட்டில் வேலை கிடைத்தால், அதை ஏற்றுக் கொள்ளலாமா? குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதிக்கா விட்டால் என்ன செய்வீர்கள்?

7. உங்கள் குடும்ப டாக்டரிடம், எச்.ஐ.வி., டெஸ்ட் செய்து கொள்ள சம்மதமா?

8. கோபம் வரும்போது, மிகவும் ஆவேசமடைவீர்களா?

9. செக்ஸ் உறவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

10.திருமணத்திற்குப் பின்  பெற்றோருடன் வசிக்கப் போகிறீர்களா? தனியாகவா?

கேள்விகள் இவ்வளவுதான். திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் இந்த கேள்விகளை கேட்டு பதிலை பெற்றுக் கொள்ள வேண்டும். கேள்விகள் கடினமாக தோன்றலாம்; ஆனால், திருமணத்திற்குப் பின், பெரும்பாலான தம்பதிகள், இதே விவகாரங்களில் தான் பிரிந்து விடுகின்றனர். எனவே, திருமணத்திற்கு முன்பே, எல்லா சந்தேகங்களையும் போக்கிக் கொண்டால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

முயற்சி செய்யுங்கள்.  



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us