தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதை - மூடிய கைகளுக்குள் மூல மந்திரம் - 1,250 ரூபாய் சன்மானம்!

கவிதை - மூடிய கைகளுக்குள் மூல மந்திரம் - 1,250 ரூபாய் சன்மானம்!

கவிதை - மூடிய கைகளுக்குள் மூல மந்திரம் - 1,250 ரூபாய் சன்மானம்!


PUBLISHED ON : ஜூலை 18, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூடிய கைகளுக்குள் மூல மந்திரம் 



* மனமுடைந்து போகையில்

 துக்கங்களைப் பகிர

 துணையில்லையே என

 துடித்துப் போகலாம்!



* எல்லாருக்குமா

 உடன்பிறப்புகள்

 ஓடிவந்து உதவுகின்றனர்?



* பல பேரின் பாதையில்

 குடும்பத்தின் நிழலே

 குழி பறிக்கலாம்!



* வறுமை-

 வழி மறிப்பதும்,

 வசதி வாய்ப்புகள்

 கதவடைப்பதும்

 காலங்காலமாய் நிகழ்பவைதானே?



* உறவுகள் நம்பாத போதும்,

 நட்பு

 பரிகசிக்கும் போதும்

 பாதுகாக்கத் துணை வருவது எது?



* கலங்குகிற போதெல்லாம்

 கண்ணுக்குத் தெரியாது -

 கை கொடுத்துத் தூக்கும்

 அந்தக் கை யாருடையது?



* நமக்குள்

 நாற்றாய் இறங்கி

 நங்கூரமாய்

 ஆட்டம் தடுக்கிறதே

 அது எது?



* ஆண்டவன் யாரையும்

 தனிமரமாய்ப் படைத்துத்

 தவிக்க வைப்பதில்லை!



* தடைகளை வெல்லும்

 தகுதியாக,

 போராடும் உறுதியைத் தான்,

 ஜனிக்கிற குழந்தையின்

 இறுக மூடிய இரண்டு கைகளுக்குள்

 துணையாகத்

 திணித்து வைத்து அனுப்புகிறது

 வாழ்க்கை!

 - ஆர்.அம்பிகா, நெல்லை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us