தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மணிகளாக மாறும் சாம்பல்!

மணிகளாக மாறும் சாம்பல்!

மணிகளாக மாறும் சாம்பல்!


PUBLISHED ON : டிச 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் அன்புக்குரியவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வோம்? ஒரு சில நாட்களுக்கு அழுவோம்; ஒரு சில மாதங்களுக்கு கவலைப்படுவோம். ஒரு சில ஆண்டுகளானால்? இறந்தவரை பற்றிய நினைவுகளை, மனதின் ஒரு ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டு, நம் வேலையை கவனிக்க துவங்கி விடுவோம்.

ஆனால், இறந்தவர்களின் உடலை எரித்த சாம்பலை, நினைவுச் சின்னமாக்கி, அதை எப்போதும், நம்முடன் வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு புதுமையான நடைமுறையை தென் கொரியாவில் பின்பற்றுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா?

உலகில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. உலகின் மற்ற நாடுகளை விட, தென் கொரியாவில் நிலத்துக்கு மதிப்பு அதிகம். இங்கு இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் மரபு பின்பற்றப்படுகிறது. ஆனால், வசிப்பதற்கே நிலம் கிடைக்காத போது, புதைப்பதற்கு கணிசமான அளவில் நிலத்தை ஒதுக்க முடியுமா? இதனால், தென் கொரிய அரசு, 'இறந்தவர்களின் உடல்களை புதைக்காமல், எரித்து விடுங்கள்...' என தீவிர பிரசாரம் செய்தது. அரசு காட்டுக் கத்தலாக கத்திய போதும், இதை யாருமே பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, 2000ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, உடலை புதைக்க வேண்டுமானால், முன் கூட்டியே அதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவித்து, பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், புதைக்கப்பட்ட, 60 ஆண்டுகளுக்கு பின், கல்லறையில் இருந்து புதைக்கப்பட்டவர்களின் உடல், தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும்.

இந்த வினோதமான சட்டத்துக்கு பெரிய அளவில் பயன் கிடைத்தது. இதற்கு பின், பெரும்பாலான உடல்கள் எரியூட்டப்பட்டன. தென் கொரிய மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை, தங்களுக்கு சாதகமாக்கி, லாபம் பார்க்க முடிவு செய்தன, சில நிறுவனங்கள்.

இதன்படி, இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டவுடன், அதில் இருந்து கிடைக்கும் சாம்பல் மற்றும் கரித் துகள்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை, அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அழுத்தத்துக்கு ஆளாக்கி, கண்ணாடி போன்ற வெள்ளை கற்களாக்கி விடுகின்றனர். பின், இந்த படிகங்களை, சில ரசாயணங்களை சேர்த்து, கழுத்து மற்றும் கைகளில் அணிந்து கொள்ளும் பாசி மணிகள் போல் மாற்றி, அதற்கு வர்ணம் பூசி, உறவினர்களிடம் கொடுத்து விடுகின்றனர். இந்த மணிகளை, இறந்தவர்களின் உறவினர்கள், அவர்களின் நினைவாக, எப்போதும் வைத்துக் கொள்ளலாம். சாம்பலை மணிகளாக்குவதற்கு, 90 நிமிடங்கள் போதும். இதற்கான மொத்த செலவு, 4,500 ரூபாய் தான்.

இந்த புதுமையான வியாபாரம், தற்போது, தென் கொரியாவில் சக்கை போடு போடுகிறது. தென் கொரியாவில் உள்ள போன்யாங் என்ற நிறுவனம் தான், இதில் கொடி கட்டி பறக்கிறது. வழக்கம் போல், தென் கொரியாவில் உள்ள பழைமைவாதிகள் இதற்கும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இறந்தவர்களை நினைவு படுத்துகிறோம் என்ற பெயரில், தங்களின் வியாபார தந்திரத்துக்காக, இறந்தவர்களை அவமதிக்கின்றனர் என்பது, அவர்களின் குமுறல்.

***

சி. சண்முகநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us