தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பார்வை இழந்தவர்களுக்கு வழி காட்டும் ரோபோ நாய்!

பார்வை இழந்தவர்களுக்கு வழி காட்டும் ரோபோ நாய்!

பார்வை இழந்தவர்களுக்கு வழி காட்டும் ரோபோ நாய்!


PUBLISHED ON : டிச 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்வையற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காகவே, நவீன தொழில் நுட்பத்தாலான, 'ரோபோ' நாயை தயாரித்து வருகிறது, ஜப்பானை சேர்ந்த என்.எஸ்.கே., என்ற நிறுவனம். இந்த ரோபோ நாய்க்கு, நான்கு கால்கள் <உள்ளன. இந்த நான்கு கால்களும், மேடு, பள்ளங்கள், படிகளில் ஏறிச் செல்லும் வகையில், மடியும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கால்களின் கீழே சக்கரங்களும் உண்டு. சமதள பாதையில் மிக வேகமாக செல்ல, இந்த சக்கரங்கள் உதவுகின்றன.

ரோபோ நாயின் மேற்புறத்தில் <உள்ள கைப்பிடியில் தான், 'கன்ட்ரோல் யூனிட்' செயல்படுகிறது. நாயுடன் அதிகாலையில், 'வாக்கிங்' செல்வதை போல், இந்த ரோபோ நாயின் கைப்பிடியை பிடித்து, பார்வையற்றோர் எளிதாக நடந்து செல்ல முடியும்.

எதிரில் வாகனங்கள் வந்தாலோ, கற்கள் போன்ற தடைகள் இருந்தாலோ, ரோபோ நாயில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர், பெண் குரலில், இதுகுறித்து எச்சரிக்கும். இந்த தடைகளை கண்டுபிடிக்க, அதன் கால்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளாக இந்த ரோபோ நாயை வடிவமைக்கும் பணி நடந்து வந்தாலும், இன்னும் முடிவடையவில்லை. இது, விற்பனைக்கு வருவதற்கு இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகும்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us