தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆயிரம் கிலோ எடையுடன் மிகப்பெரிய தங்க நாணயம்!

ஆயிரம் கிலோ எடையுடன் மிகப்பெரிய தங்க நாணயம்!

ஆயிரம் கிலோ எடையுடன் மிகப்பெரிய தங்க நாணயம்!


PUBLISHED ON : டிச 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் மிகப் பெரிய தங்க நாணயத்தை, ஆஸ்திரேலிய அரசு தயாரித்துள்ளது. இதன் எடை எவ்வளவு தெரியுமா? ஆயிரம் கிலோ. இந்த நாணயத்தின் விட்டம், 80 செ.மீ., இதன் தடிமானம், 13 செ.மீ., இந்த நாணயத்தை தயாரிப் பதற்கு, 18 மாதங்கள் ஆனதாம். 99.99 சதவீத தூய தங்கத்தால் ஆனது. இதன் மதிப்பு, 262 கோடி ரூபாய் என, தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் ராணி எலிசபெத், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வந்ததை அடுத்து, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில், ராணி எலிசபெத்தின் தலையும், மறு பக்கத்தில், ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காக கருதப்படும் கங்காருவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், கனடாவில், நூறு கிலோ எடையுள்ள தங்க நாணயம் தயாரிக்கப்பட்டு இருந்தது. இது தான், உலகின் மிகப் பெரிய தங்க நாணயமாக இருந்தது. தற்போது, ஆஸ்திரேலியாவின் தங்க நாணயத்துக்கு, இந்த பெருமை கிடைத்துள்ளது. 'இந்த நாணயத்தை மிஞ்சும் அளவுக்கு, மிகப் பெரிய நாணயத்தை யாரும் தயாரிக்க முடியாது. இதை சவாலாகவே விடுக்கிறோம்...' என, சட்டைக் காலரை உயர்த்தி, பெருமை பேசுகின்றனர், ஆஸ்திரேலிய அதிகாரிகள்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us