
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரண்மனை மாடம் போல காட்சி அளிக்கும் இந்த கோபுரம், உண்மையில் ஒரு கொலை மேடை.
வியட்நாமின் பழைய தலைநகரான, ஹோ சி மின் சிட்டியில், சோக சின்னமாக காட்சி தருகிறது. 20ம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில், பிரான்ஸ் நாட்டு ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட சிறைச்சாலை வளாகத்தில் இருக்கிறது, இந்த மரண மேடை.
கொடிய அரசியல்வாதிகள், போராட்ட வீரர்கள் மற்றும் கைதிகளை கொல்வதற்காக, இந்த மரண மேடை பயன்படுத்தப்பட்டுள்ளது.
துாண்களின் உயரமான இடத்தில் மிகவும் கூர்மையான 'ப்ளேடு' கட்டப்பட்டிருக்கும். கீழே உள்ள மேடையின் முன் பகுதியில், தலை மட்டும் வெளியே தெரியும்படி நிற்க வைக்கப்படுவர். கயிறு அவிழ்த்து விடும்போது, மேலே உள்ள 'ப்ளேடு' வேகமாக கீழே பாய்ந்து மனிதனின் தலையை வெட்டி தள்ள, கீழே உள்ள பெட்டியில் தலை விழுந்து விடும்.
— ஜோல்னாபையன்