PUBLISHED ON : மார் 17, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய பிரதேச மாநிலம், போபாலிலிருந்து, 45 கி.மீ., துாரத்தில் இருக்கிறது, 'பீம்பெட்க' என்ற காட்டுப் பகுதி. இங்குள்ள குகைக்குள், பல நுாற்றாண்டுகளான பழமையான, 700க்கும் மேற்பட்ட ஓவியங்கள், இன்றும் அழியாமல் உள்ளன.
இதில், வன விலங்குகள், வேட்டைக்காரர்கள், கர்ப்பிணி பெண்கள், தாயும் சேயும் மற்றும் இசைக் கருவிகள் போன்ற, தத்ரூபமாக உள்ள பல ஓவியங்கள் உள்ளன.
இதை காண, ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
—ஜோல்னாபையன்.

