PUBLISHED ON : ஜூலை 12, 2015

அ நிறம் | அளவு
தற்போது, 'டிவி'க்களில் ஏதாவது விவகாரமான நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால், அது சம்பந்தப்பட்ட அமைப்புகள் போர்க்கொடி தூக்குவது உண்டு. சமீபத்தில், பெரு நாட்டு, 'டிவி' ஒன்றில், 'ரியாலிட்டி ஷோ' நடைபெற்றது. போட்டியில் கலந்து கொள்வோர், திராட்சை ரசம் கலந்த சாலட்டுக்குள் வைத்துள்ள கரப்பான் பூச்சிகளை சாப்பிட வேண்டும். இதில் வெற்றி பெற்றால், மெக்சிகோ சென்று வர, இலவச டிக்கெட் வழங்கப்படும். இப்போட்டியில், இளம்பெண் ஒருவர் வென்றார். ஆனால், அருவருப்பான இக்காட்சிகளை, 'டிவி' யில் பார்த்த மக்கள் ஆத்திரமடைந்து, போராட்டத்தில் குதித்து, தினமும், 'டிவி' நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
— ஜோல்னாபையன்.
