தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குழந்தை சிவன்!

குழந்தை சிவன்!

குழந்தை சிவன்!


PUBLISHED ON : ஜூன் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவபெருமான், தன் தீவிர பக்தர்களுக்கு, குழந்தை வடிவில் காட்சியளித்தும், அவர்களிடமே வளர்ந்த வரலாறும் நம் புராணங்களில் இருக்கிறது.

மனக்குழப்பத்தில் இருந்த ராவணனின் மனைவி மண்டோதரி, சிவ தரிசனம் கிடைத்தால், குழப்பம் தீரும் என்ற நம்பிக்கையில், சிவ தியானத்தில் ஆழ்ந்தாள். அப்போது, ஒரு காவலனின் வடிவத்தில் காட்சி தந்தார், சிவன். அவருடன், மண்டோதரி பேசிக் கொண்டிருக்க, அவளது குழப்பம் நீங்கி, மன நிம்மதி ஏற்பட்டது.

இவர்கள் பேசும் சத்தம் கேட்டு, அவள் அருகில் உறங்கிக் கொண்டிருந்த, ராவணன் எழுந்து விட்டான். உடனே, தன்னை ஒரு குழந்தையாக மாற்றிக் கொண்டார், சிவன். அந்தக் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தாள், மண்டோதரி.

'யார் இந்தக் குழந்தை, இதனுடன் இந்த இரவு நேரத்தில் என்ன பேசுகிறாய்?' என, ராவணன் கேட்டான்.

தன் மனக்குழப்பம் பற்றி அவனுக்கு தெரிய வேண்டாம் என நினைத்த மண்டோதரி, 'இது, நம் பணிப்பெண்ணின் குழந்தை. என்னைப் பார்த்துக் கொள்ள சொல்லி இருக்கிறாள்...' என்று சமாளித்தாள்.

இப்படி, மண்டோதரிக்கு குழந்தையாக காட்சி தந்துள்ளார், சிவன்.

வசவ புராணம் என்ற நுாலில், சிவன், ஒரு பக்தைக்கு குழந்தையாய் இருந்த கதை சொல்லப்பட்டுள்ளது. அந்த பக்தைக்கு குழந்தை பாக்கியம் இல்லை. சிவனையே தன் குழந்தையாக எண்ணியிருந்தாள். அவர் அணிந்திருந்த உடை அவளுக்கு பிடிக்கவில்லை.

'சிவனே... உனக்கு தாயுமில்லை, தந்தையுமில்லை. உன்னைப் பெற்றவள் இருந்திருந்தால், இப்படி பாம்பையும், புலித்தோலையும் உனக்கு உடையாக அணிவித்திருப்பாளா... நீ எனக்குப் பிள்ளையாகு, உன்னைக் கண் போல் கவனிக்கிறேன்...' என, கண் கலங்கினாள்.

அவளது விருப்பத்தை நிறைவேற்ற குழந்தை வடிவெடுத்த, சிவன், அவள் வீட்டின் முன் கிடந்து அழுதார். அந்த குழந்தையை கண்டதும், மகிழ்ந்தாள், பக்தை. அந்த குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்தாள். ஒருமுறை குழந்தைக்கு காய்ச்சல் வந்தது. வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை.

குழந்தையை காண வந்த ஒரு தோழி, 'இது, நீ பெற்ற பிள்ளையாய் இருந்தால் இப்படி காய்ச்சல் வரும்படி அசட்டையாய் இருந்திருப்பாயா? பெரிய வைத்தியர்களிடம் காட்டி இருக்கலாமே...' என்று திட்டினாள்.

பக்தையின் மனம் நொந்தது. தன் தோழி சொல்வது சரியாக இருக்குமோ என வருந்தி, தன்னையே அழித்துக் கொள்ள எண்ணினாள்.

'அம்மா, அவசரப்படாதே...' என்று பேசிய குழந்தை, அவளுக்கு முக்தி அளித்தது. சிவனையே வளர்த்தவள் என்பதால், இந்த பக்தைக்கு, பெச்சம்மா - தாய்க்கெல்லாம் தாய் என, பெயர் வந்தது.

சிவனுக்கு, குழந்தை வடிவிலான சிலை, தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின், நேகேரி செம்பிலான் மாவட்டம், ரண்டாவ் நகரின் புறநகர் பகுதியில், சிவசங்கர வல்முனி வனமுனி கோவிலில் உள்ளது. படுத்த நிலையில் உள்ள இந்த சிவனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விநாயகரும், இங்கு குழந்தை வடிவில் உள்ளார்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us