
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்யாணமான தம்பதியர், எதிர் காலத்தில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து என்ற நிலைக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, வேளாங்கன்னி கோவிலில், ஆமப்பூட்டு என்ற வழிபாட்டை நடத்துகின்றனர்.
அங்குள்ள கடைகளிலிருந்து பூட்டு வாங்கி வந்து, கோவிலில் தொங்க விடுகின்றனர் பக்தர்கள். 'பல ஆண்டுகளுக்கு முன் இல்லாத இந்த பழக்கம் இப்போது எப்படி வந்தது...' என்று கேட்டபோது, கடைக்காரர் ஒருவர், 'நாகூர் தர்காவில் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது; அங்கிருந்து தான் இந்த பழக்கம் வந்தது...' என்றார்.
—ஜோல்னாபையன்

