PUBLISHED ON : ஜூன் 04, 2017

எங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் மகன், அருகில் உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறான்.
பள்ளியில், புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்ன வாசல் மற்றும் குடுமியான் மலைக்கு கல்வி சுற்றுலா செல்ல, ஏற்பாடு செய்திருந்தனர். அதன்பொருட்டு, மாணவர்கள் செல்லவிருக்கும் இடத்தின் வரலாற்று தகவல்கள், சிறப்புகள், பஸ் ரூட் உள்ளிட்ட, பயண அட்டவணையை, இரண்டு பக்கம் தயார் செய்து, மாணவ, மாணவியரிடம் வழங்கியிருந்தனர்.
இதனால், தங்கள் பிள்ளைகள் செல்லவிருக்கும் சுற்றுலா இடம் பற்றிய தகவல்களை, பெற்றோர் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. கூடவே, தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களையும் குறிப்பிட்டிருந்ததால், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர், பெற்றோர்.
கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் முன், இதுபோன்று, தாங்கள் அழைத்து செல்லவிருக்கும் இடம் குறித்த கூடுதல் தகவல்களை வழங்கினால், நல்ல வரவேற்பு கிடைக்குமே! செய்வார்களா?
—சோ.ராமு, திண்டுக்கல்.
