தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கீழக்கரை துதல் அல்வா!

கீழக்கரை துதல் அல்வா!

கீழக்கரை துதல் அல்வா!


PUBLISHED ON : ஜூன் 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளஞ்சிவப்பு மற்றும் கோதுமை நிறத்தில், அல்வாவை சுவைத்தவர்களுக்கு, வித்தியாசமான விருந்து, கீழக்கரை துதல் அல்வா!

கருப்பு நிறத்தில், 'ப்ளாக் பாரஸ்ட்' கேக் போல இருக்கும் இதை, பேச்சு வழக்கில், 'தொதல் அல்வா' என்கின்றனர்.

இதன் பூர்வீகம் இலங்கை; அங்கு, இதற்கு, 'சீனிக்கழி' என்று பெயர். வணிகத்திற்காக அங்கு சென்ற இவ்வூர்காரர்களின் மூலமாக, இங்கே அறிமுகம் ஆனது.

தேங்காய்ப்பாலை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தி, அதில், ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து காய்ச்சி, பின், சிறிதளவு சீனி, நாட்டுக் கருப்பட்டி மற்றும் நீரில் கரைத்த மைதா மாவு சேர்த்து, அடி பிடிக்காமல், மூன்று மணி நேரம் கிளறினால், ஜெல்லி போன்ற பதத்திற்கு வரும்.

அப்போது, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், ஏலக்காய் பொடி மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து இறக்கினால், துதல் அல்வா தயார்!

தேங்காய்ப் பால், நாட்டுக் கருப்பட்டி மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய் என, உடலுக்கு ஊட்டம் தரும் பொருட்களில் தயாரிப்பதால், அனைவரும் சாப்பிடலாம்.

தினமும் நண்பகல், 12:00 மணியிலிருந்து இதன் விற்பனை துவங்குகிறது.

கீழக்கரையில், துதல் அல்வா விற்கும் ஜாஹிர் உசேன், ''இலங்கையில் வியாபாரம் செய்த எங்களது தாத்தா, இதை, இங்கு அறிமுகம் செய்தார். மூன்று தலைமுறைகளாக, 100 ஆண்டுகளை தாண்டி, இதை தயாரித்து, விற்கிறோம். வெளியூர்களுக்கும், மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுக்கும், அதிகளவில் பார்சல் செல்கிறது; 20 நாட்கள் வரை, கெடாது; தேவைப்பட்டால், சூடுபடுத்தி சாப்பிடலாம்,'' என்றார்.

ராமநாதபுரம், காயல்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் மல்லிப்பட்டினம் என, மன்னார் வளைகுடா கடற்கரையோர ஊர்களில் வசிப்போர், இதை, குடிசை தொழிலாகவும் தயாரித்து, விற்கின்றனர்.

ஜாஹிர் உசேன் மொபைல் எண்: 99423 20350

மு.ஆதவன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us