PUBLISHED ON : ஏப் 23, 2023

இந்த மூதாட்டி, சாதாரண பெண்மணி அல்ல. 73 ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம் பெண்களுக்கு அவ்வளவாக சுதந்திரம் இல்லாத காலத்திலேயே, சமுதாய கட்டுப்பாடுகளை தகர்த்து, நாடக நடிகையானவர்.
நிலம்பூர் ஆயிஷா என்ற துணிச்சல் மிக்க பெண்ணான இவர், கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்தவர்; சிறு வயதிலேயே மேடை ஏறினார். நடிகையானது மாபெரும் குற்றம் என, சமுதாயத்தினர் தடுத்தபோதும், அந்த தடைகளை உடைத்தெறிந்தார்.
இதற்காக இவர் சந்தித்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மேடையில் கல்லடிகளை தாங்கி கொண்டார். உடல் காயம்பட்டபோதும் துணிச்சலை கைவிடாமல் நடிப்பதை தொடர்ந்தார், ஆயிஷா.
அன்று துவங்கிய நடிப்பை, இன்று வரை தொடர்கிறார். நாடகங்கள், 'டிவி' தொடர்கள் மற்றும் சினிமா என்று, அனைத்து கலை துறைகளிலும் தன் திறமையை காட்டி வரும், நிலம்பூர் ஆயிஷா, இன்றும் ரசிகர்களால் போற்றப்படுகிறார்.
— ஜோல்னாபையன்
