தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பக்திக்கு ஜாதியில்லை!

பக்திக்கு ஜாதியில்லை!

பக்திக்கு ஜாதியில்லை!


PUBLISHED ON : செப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்.,22 நந்தனார் குருபூஜை

சிதம்பரம் அருகிலுள்ள மேல ஆதனூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர், நந்தனார். சிவபக்தரான இவருக்கு சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல். ஆனாலும், விவசாயக் கூலி வேலை செய்யும் அவரால், உடனடியாக சிதம்பரம் செல்ல முடியவில்லை. நாளை போகலாம், அதற்கு அடுத்த நாள் போகலாம் என்று நாளை தள்ளிப்போட்டு வந்ததால், அவருக்கு, 'திருநாளைப்போவார்' என்ற பெயர் ஏற்பட்டது.

ஒருநாள், தன் ஊரின் அருகிலுள்ள திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவிலுக்கு வந்தார். அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தவர் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. எனவே, வாசலில் இருந்தபடியே சுவாமியை எட்டி எட்டி பார்த்தார். சுவாமி தெரியவில்லை; முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்தது.

மனவருத்தத்துடன், 'சிவனே... உன் திருக்காட்சி கிடைக்காதா...' என்று மனமுருகி வேண்டினார். இதைக் கேட்ட துவார பாலகர்கள், சிவனிடம், 'ஐயனே... தங்கள் பக்தரான நந்தனார் வந்திருக்கிறார்...' என்று கூற, சிவனும், நந்தனாரின் பக்தியை மெச்சி, தனக்கு முன் அமர்ந்திருக்கும் நந்தியை விலகி இருக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி நந்தி விலகியது; சிவனின் திருக்காட்சி நந்தனாருக்கு கிடைத்தது.

இந்த இடத்தில் சிலர் ஒரு கேள்வியை எழுப்புவர்... 'சிவன் நேராக அவரை உள்ளே வரவழைத்திருக்க வேண்டியது தானே... ஏன் நந்தியை விலகச் சொன்னார்...' என்று!

அதற்கு காரணம் இருக்கிறது. பிற்காலத்தில், இந்த நந்தி ஏன் விலகியிருக்கிறது என்ற கேள்வி எழும்; அதற்கு நந்தனார் தான் காரணம் என்று தெரிய வரும். இதன் மூலம், அவர் புகழ் எங்கும் பரவும். அது மட்டுமல்ல, சிதம்பரத்திற்கு அவரை வரவழைத்து, இதையும் விட பெரிய பெருமை தரவே இத்திருவிளையாடலை நிகழ்த்தினார், சிவன்.

சிதம்பரம் வந்த நந்தனார், கோவிலுக்குள் செல்ல இயலாமல், 'நடராஜப்பெருமானே... உன் தரிசனம் எப்போது கிடைக்கும்...' என்றவாறு, ஊரைச் சுற்றியவாறு இருந்தார்.

ஒருநாள் மனம் கசிந்து, சிவனை வணங்கியவர், ஓரிடத்தில் படுத்தார். கனவில் தோன்றிய சிவன், 'நந்தா வருந்தாதே... என்னைக் காணும் நாள் நெருங்கி விட்டது; நீ, தீயில் மூழ்கி எழுந்து, என்னிடத்தில் வருவாய்...' என்றார்.

அதே போன்று, தில்லை வாழ் அந்தணர்கள் கனவில் தோன்றி, 'என் பக்தன் நந்தனை, அக்னி குண்டத்தில் இறங்க வையுங்கள்; அவன் உயிருடன் வருவான். அவனை இங்கே அழைத்து வாருங்கள்...' என்றார். அந்தணர்களும் நந்தனாரைத் தேடிச் சென்று தகவல் சொல்ல, மனம் மகிழ்ந்த நந்தனார், தீயில் மூழ்கி எழுந்தார். அவரைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர், அந்தணர்கள். நடராஜப்பெருமானைத் தரிசிக்க சன்னிதி பக்கம் ஓடிய நந்தனாரைக் காணவில்லை. அவர் நடராஜப்பெருமானுடன் இரண்டற கலந்து விட்டார்.

இவரது குருபூஜை, புரட்டாசி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் நடைபெறும். பக்திக்கு குலமோ, கோத்திரமோ தேவையில்லை. கடவுள் மீது, தீவிர நம்பிக்கையிருந்தால், அவரே, தன்னைக் காண வழிகாட்டுவார்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us