தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலம் எப்போது வரும்!

வாழ்க்கைப் பயணத்தின்

வழித்துணை போல்

வந்து சேர்ந்து கொண்டது

அது!

விரும்பித் தேடியது இல்லை

விலகக் கூடியதும் இல்லை

அது!

என்னை எனக்கே

உணர்த்தியதும்

என்னை நானே வெறுக்க காரணமும்

அதுதான்!

வெட்டி விட நினைத்தாலும்

எட்டி அதை உதைத்தாலும்

விட்டு விலகாது உடன் வருகிறது!

என்னை அது விட்டுவிட்டாலும்

அதற்கு பலருண்டு

அதை நான் விட்டுவிட்டால்

எனக்கோ எதுவுமில்லை

எனச் செய்து விட்டது!

அது

அதுவாக வந்ததோ

அல்லது

எதுவாக வந்ததோ...

ஆனால்

மெதுவாகத்

தான் வந்தது!

முதலிலேயே

தடை செய்யாதது தப்பு தான்

இப்போதோ

தப்பையெல்லாம் அது

தடை செய்வதில்லை!

இமைக்க மறந்திருக்கலாம்

உறக்கத்தில்

சுவாசிக்க மறந்திருக்கலாம்

தும்மல் வருகையில்

இரண்டை மறந்திருந்தாலும்

அதை மறக்க இயலவில்லை!

அது தவறானதல்ல

இயல்பானது தான் என்கின்றனர்

அதுவோ

தவறியும்

இயல்பாய் இருக்க விடுவதில்லை!

விசாரித்ததில்

அது

மிக மோசமானது என தெரிகிறது

ஆனால்

எல்லாருக்கும் அது

தெரிந்ததாய் இருக்கிறதே... எப்படி?

கர்ம வினையைக்கூட

களைந்து விடலாம்

கர்மம்...

இந்தக் காதலைக் களைய

கைகூடும் நாள் எப்போது வரும்!

- கைலாஷ், தென்காசி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us